ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.

அட்டகத்தி (2012) திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார்.

வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.

வாழ்க்கை

ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.

இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார்.

2011ம் ஆண்டு ‘அவர்களும் இவர்களும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ‘ஆச்சரியங்கள்’ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கின்றார்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்
ஆண்டுதிரைப்படம்
2010நீதானா அவன்
2011அவர்களும் இவர்களும்
 உயர்திரு 420
 சட்டப்படி குற்றம்
2012விளையாட வா
 அட்டகத்தி
 ஆச்சரியங்கள்
2013புத்தகம்
2014ரம்மி
 பண்ணையாரும் பத்மினியும்
 கதை திரைக்கதை வசனம் இயக்கம்
 திருடன் போலீஸ்
2015காக்கா முட்டை
2016ஆறாது சினம்
 ஹலோ நான் பேய் பேசுறேன்
 மனிதன்
 தர்மதுரை
 குற்றமே தண்டனை
 காதலை
 பறந்து செல்ல வா
 மோ
2017ஜோமொண்டே சுவிசேசங்கள்
 முப்பரிமாணம்
 கட்டப்பாவ காணோம்
 சகாவு
 ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
 டாடி
2018இலட்சுமி
 சாமி 2
 செக்கச்சிவந்த வானம்
 வட சென்னை
 கனா
2019விளம்பரம்
 கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி
 மெய்
 நம்ம வீட்டுப் பிள்ளை
 மிஸ்மாட்ச்
2021பொன்னியின் செல்வன்

சின்னத்திரை

  • அசத்தப்போவது யாரு – நகைச்சுவை தொலைக்காட்சி
  • மானாட மயிலாட – நடன நிகழ்ச்சி

விருதுகள்

  • 2015 – காக்கா முட்டை – சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது
  • 2016 – தர்மதுரை – சீமா சிறந்த நடிகை (துணை) விருது
  • 2016 – ஆனந்த விகடன் நம்பிக்கை விருது
  • 2018 கனா – பிலிம்பேர் விருது

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *