நடிகை சினேகா | Actress Sneha

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பிறப்பும் கல்வியும்

சினேகா மும்பையில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார்.அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.[சான்று தேவை]

திரைப்பட வாழ்கை

சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்

விளம்பர மாடலிங் தொழில்

சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ் , ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.

பொது வாழ்வும் உதவியும்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில 41 நாளாக போராடி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.[சான்று தேவை]

நடித்த திரைப்படங்கள்

 • என்னவளே
 • ஆனந்தம்
 • பார்த்தாலே பரவசம்
 • விரும்புகிறேன்
 • ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
 • உன்னை நினைத்து
 • கிங்
 • புன்னகை தேசம்
 • பம்மல் கே. சம்பந்தம்
 • ஏப்ரல் மாதத்தில்
 • வசீகரா
 • பார்த்திபன் கனவு
 • வசூல்ராஜா எம். பி. பி. எஸ்
 • ஜனா
 • போஸ்
 • ஆட்டோகிராப்
 • அதுவ
 • ஆயுதம்
 • சின்னா
 • ஏபிசிடி
 • புதுப்பேட்டை
 • நான் அவனில்லை (2007)
 • பள்ளிக்கூடம்
 • பிரிவோம் சந்திப்போம் (விஜய் விருதுகள் (சிறந்த நடிகை))
 • சிலம்பாட்டம்
 • கோவா
 • தீராத விளையாட்டுப் பிள்ளை
 • பவானி ஐ. பி. எஸ்.
 • பொன்னர் சங்கர் (திரைப்படம்)
 • ஒரு கல் ஒரு கண்ணாடி)

வெளி இணைப்புகள்

நடிகை சினேகா – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *