சாயிஷா | Sayyeshaa

சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு படமான அகில் (2015) படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சொந்த வாழ்க்கை

நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை.

அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் . 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.

இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொழில்

தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார். 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். .

திரைப்பட வரலாறு

2015அகில்
2016சிவாய்
2017வனமகன்
2018கடைக்குட்டி சிங்கம்
2018ஜுங்கா
2018கஜினிகாந்த்
2019காப்பான்
2019யுவரத்தினா

வெளி இணைப்புகள்

சாயிஷா – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *