நடிகை தமன்னா | Actress Tamanna Bhatia

தமன்னா (Tamanna Bhatia, பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

ஆரம்பகால வாழ்க்கை

தமன்னா 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணன் உள்ளார். அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். இவர் சிந்தி வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரைப் பெயர் மாற்றப்பட்டது (Tamannaah).

திரைவாழ்க்கை

2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் படத்தின் மூலம் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் சிறீ என்னும் படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.முதல் மூன்று படங்களிலேயே தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழி கதாநாயகியானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி,கல்லூரி ஆகிய படங்களிலும் ,தெலுங்கில் ஹேப்பி ரடேஸ்,காளிதாசு,ரெடி ஆகிய படங்கலிலும் நடித்தார்.

2009 ஆம் ஆண்டு தனுசுடன் நடித்த படிக்காதவன் படம் தமிழில் வெற்றி பெற்றது.அதன் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தார்.அந்த படம் தமிழில் 100 நாட்களும் ,தெலுங்கில் 200 நாட்களும் ,மலையாளத்தில் 200 நாட்களும் ஓடி மிகப்பெரிய வெற்றிபெற்றது.பின் தெலுங்கில் சித்தார்த்துடன் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடித்தார்.தமிழில் ஆனந்த தாண்டவம்,பரத்துடன் கன்டேன் காதலை படங்களில் தொடர்ந்து நடித்தார்.

2010 ஆம் ஆண்டு தமிழில் கார்த்தியுடன் பையா படத்தில் நடித்தார்.அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.பின் விஜயுடன் சுறா படத்திலும் ,ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி படத்திலும் நடித்தார்.இவ்விரண்டு படங்களும் ஓரளவிற்கு ஓடின.

2011 ஆம் ஆண்டு கார்த்தியுடன் சிறுத்தை , தனுசுடன் வேங்கை,தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் பத்ரிநாத்,நாகசைத்தன்யா வுடன் 100% லவ் ஆகிய படங்களில் நடித்தார்.100%லவ் படம் மாபெரும் வெற்றியடைந்தது.அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகியானார்.முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக தொடந்து நடித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஊசரவள்ளி,ராமுடன் எந்துகன்டே பிரேமந்தா,பிரபாசுடன் ரிபெல்,ராம்சரணுடன் ராச்சா, பவன்கல்யான் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்தார்.அனைத்தும் வெற்றிப்படங்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு 2013 ஆம் இந்தியில் ஹிம்மாத்வாளா படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்தார்.பின் இரண்டாவது முறை நாகசைத்தன்யாவுடன் தடகா படத்தில் நடித்தார்.தமிழில் அஜித்குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு ஹம்சக்கல்ஸ் படத்தில் சயிப் அலி கான் ஜோடியாக நடித்தார்.அக்ஷய்குமார் ஜோடியாக என்டர்டெயின்மன்ட் படத்தில் நடித்தார்.தெலுங்கில் அல்லுடுசீனு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.பின்னர் தொடர்ந்து அயிட்டம் நம்பரானார்.மகேஷ் பாபு ஜோடியாக ஆகடு படத்தில் நடித்தார்.

2015 ஆம் ஆண்டு ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார்.அந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து 600 கோடி வசூலைக் குவித்தது.சீனாவிலும் அப்படம் வெளியானது.தமன்னாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

பின்னர் ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்தார்.இஞ்சி இடுப்பழகி,நண்பேன்டா படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.ரவி தேஜாவுடன் பெங்கால் டைகர் படத்தில் நடித்தார்.

ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு குரும்படத்தில் நடித்தார்.

2016 ஆம் ஆண்டு கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்தார்.கார்த்தியுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது.அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக ஆனது.தெலுங்கில் ஓபிரி என்ற பெயரில் வெளியானது.ஸ்பீடுன்னாடு,ஜாகுவார் ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டார்.தேவி படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்த படம் வெற்றியடைந்தது.தெலுங்கில் அப்கிநேத்ரி என்றும் , ஹிந்தியில் டூடக் டூடக் டூட்டியா என்றும் அப்படம் வெளியானது.விஷாலுடன் கத்திசண்டை படத்தில் நடித்தார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி ஜோடியாக நடித்த தர்மதுரை படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்து.

2017 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாகி 2000 கோடி வசூல் ஈட்டி சாதனைப்படைத்தது.ஜெய் லவ குசா படத்தில் குத்தாட்டம் போட்டார். சிம்பு வுடன் அஅஅ படத்தில் நடித்தார்.

2018ஆம் ஆண்டு விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்தார்‌.மராத்தியில் அஅ பப கக படத்தில் சுனில் ஷெட்டியுடன் நடித்தார்.தெலுங்கில் நா நுவ்வே , நெக்ஸ்ட் என்டி படங்கள் தோல்வியடைந்தன.

மாபெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் குத்தாட்டம் போட்டு பாராட்டுகளைப் பெற்றார்.

2019 ஆம் ஆண்டு வெங்கடேசுடன் நடித்த எஃப் 2 படம் 180 கோடி வசூல் செய்து தமன்னாவிற்கு பாராட்டுகள் குவிந்தன.தமிழில் உதயநிதியுடன் கண்ணே கலைமானே படம் வெளியானது.

தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அந்த படம் மே 31 2019 அன்று வெளியானது.தெலுஙகில் அப்கிநேத்ரி 2 என்ற பெயரில் அதே நாளில் வெளியானது.

ஹிந்தியில் காமோஷி என்ற படம் ஜூன் 14 ,2019 அன்று வெளியானது.அந்தபடம் தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் என்ற படத்தின் பதிப்பாகும்.

சிரஞ்சீவி ஜோடியாக சயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார் அப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமன்னாவின் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெற்றியடையவில்லை. பெட்ரோமாக்ஸ் என்ற தமிழ் திகில் திரைப்படத்தில் நடித்திருந்தார், அப்படமும் தோல்வி .

ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.அப்படம் வெளிவர தயாராக உள்ளது.

F2 வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.பா

பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் ஜோடியாக “போலி சூடியான் ” படத்தில்த்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கோபிசந்த்துடன் சீத்திமார், நிதினுடன் ஒரு படம், சத்யதேவுடன் ஒரு படம் என 6 படங்களை தன் கை வசம் வைத்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்
2005சாந்த் சே ரோசன் செகரா
 சிறீ
2006கேடி
 ஜடோ
2007வியாபாரி
 ஏப்பி டேய்சு
 கல்லூரி
2008காளிதாசு
 ரெடி
 நேற்று இன்று நாளை
 நின்னே நேனு ரேபு
2009படிக்காதவன்
 கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம்
 அயன்
 ஆனந்த தாண்டவம்
 கண்டேன் காதலை
2010பையா
 சுறா
 தில்லாலங்கடி
2011கோ
 சிறுத்தை
 பத்ரிநாத்
 100% காதல்
 வேங்கை
2012ஊசரவள்ளி
 எந்துகன்டே பிரேமந்த்தா
 ரிபெல்
 ராச்சா
 கேமராமேன் கேங்தோ ராம்பாபு
2013ஹிம்மாத்வாளா
 தடகா
 வீரம்
2014ஹம்சக்கல்ஸ்
 அல்லுடு சீனு
 எண்டர்டெய்ன்மன்ட்
 ஆகடு
2015நண்பேன்டா
 பாகுபலி
 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
 சயிஸ் ஜீரோ
 இஞ்சி இடுப்பழகி
 பெங்கால் டைகர்
 ரன்வீர் சிங் ரிடன்ஸ்
2016ஸ்பீடுன்னாடு
 ஓபிரி
 தோழா
 தர்மதுரை
 ஜாகுவார்
 ஜேங்வார்
 தேவி
 அப்கிநேத்ரி
 டூடக் டூடக் டூடியா
 கத்தி சண்டை
2017பாகுபலி 2
 அன்பானவன் அசராதவன் அடங்காதன்
 ஜெய் லவ குசா
2018ஸ்கெட்ச்
 ஏஏ பிபி காகா
 நா நுவ்வெ
 நெக்ஸ்ட் ஏண்டி?
 கே ஜி எஃப் – அத்தியாயம் 1
2019எஃப் 2 – ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேசன்
 கண்ணே கலைமானே
 தேவி 2
 அப்கிநேத்ரி 2
 காமோஷி
 சயிரா நரசிம்ம ரெட்டி
 பெட்ரோமாக்ஸ்
 ஆக்ஷன்
2020சரிலேரு நீக்கெவரு
 தட் இஸ் மகாலக்ஷ்மி
 போலே சூதியா
 சீத்திமார்
 குர்த்துண்ட சீதாக்களம்

வெளி இணைப்புகள்

நடிகை தமன்னா – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *