எங்களைப் பற்றி

தமிழர் உலகம்,

கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடிகளாகிய நம் தமிழ் குடிகளின் தோற்றம், சரித்திரம், பண்பாடு, வாழ்க்கைமுறை, அரசியல், தொழில்நுட்பம் ஆகியனவற்றை பதிவு செய்வதும், எடுத்துச் செல்வதும் ஏனைய தமிழ் குடிகளினுடன் பகிர்வதுமே நம் நோக்கம். உலகில் தொன்றுதொட்டு வாழக்கூடிய தொன்மையான இனங்களில் ஒன்றான தமிழர் இனத்தை பற்றிய பெருமையை உலகறியச் செய்வதும் நம் நோக்கங்களில் ஒன்றாகும்.

தமிழ் நாட்டையும் தென்இந்தியாவையும் ஏன் கடல் கடந்தும் ஆட்சிபுரிந்த வீரம் பொருந்திய நம் தமிழ் மன்னர்களின் சரித்திரத்தை விளக்குவதுவும் அவர்கள் புரிந்த சரித்திரப் புகழ்பெற்ற போர்கள் மற்றும் அவர்கள் புரிந்த செயற்கரிய செய்லகளை பறைசாற்றுவதுவும் நம் நோக்கங்களில் ஒன்றாகும்.

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வளர்த்து செம்மொழியாம் நம் தமிழ் மொழியை வளர்த்த மன்னர்களும், புலவர்களும் மற்றும் அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றியும் இங்கு காணலாம்.

ஆன்மீகத்திற்கு தமிழ் மன்னர்கள் ஆற்றிய தொண்டையும் கட்டிய கோவில்களை பற்றியும் இங்கு காணலாம். சிறப்புமிக்க கோவில்கள், அக் கோவில்களின் கட்டிட கலை, சிற்பக்கலை பற்றியும் இங்கு காணலாம். இவை அனைத்தையும் தொகுத்து ஒரே இடத்தில் ஒரே இணையதளத்தில் தருவதே நம் நோக்கம்.

வாசகர்கள் எங்களின் இம்முயர்ச்சியை ஆதரிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.