பெருநற்கிள்ளி -கிள்ளிவளவன்

மன்னர் நலங்கிள்ளியின் ஆட்சிக்குப் பிறகு சோழ அரசராக முடி சூடிக்கொண்டவர் கிள்ளிவளவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே அரசர்  கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்த சோழ மன்னனாக இருக்க வேண்டுமென்பது திண்ணம். மிகையாக 10 புலவர்கள் கிள்ளிவளவனை பற்றி போற்றிப்  பாடி  உள்ளனர். புறநானூற்றில் கிள்ளிவளவனை  போற்றிப் பாடிய பாடல்கள் மொத்தம் 18 உள்ளன.

மிகக்சிறந்த போர் வீரரான கிள்ளிவளவன் ஒரு புலவரும் கூட. சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவரது  நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் மன்னர் கிள்ளிவளவனால் இயற்றப்பட்டது. கிள்ளிவளவன் இன்றைய உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை  ஆட்சி செய்தார் என்பது தெரிகிறது.

இயல்பிலேயே மிகவும் செருக்குமிக்கவனாக விளங்கிய  மன்னர் கிள்ளிவளவனை  பல புலவர்கள் தொடர்து  நல்ல அறிவுரைகள்  வழங்கி, கிள்ளிவளவனை  நல்ல முறையில் திருத்தியுள்ளனர்.  செருக்குமிக்கவனாக இருந்தாலும் மன்னர் கிள்ளிவளவன் தமிழையும் தமிழ் புலவர்களையும் போற்றி பரிசுகள் பல வழங்கி ஆதரித்து வந்தது பாடல்கள் வாயிலாகத்  தெரிகின்றது.

வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு பாடல் இயற்றி அதன் மூலம் வரியை தள்ளுபடி செய்ததை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதன் மூலம் கிள்ளிவளவன் புலவர்கள் பால்  கொண்டிருந்த மரியாதையும், அன்பும் தெரிய வருகிறது. இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் கிள்ளிவளவன் காட்டிய கொடைத்திறனை கண்டு வியந்து பாராட்டி  பாடியுள்ளனர். 

கடையெழு வள்ளல்களுள் ஒருவறும்  திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர்  மன்னர் மலையமான் திருமுடிகாரி. அதே சமயத்தில் மற்றொரு கடையெழு வள்ளல்களுள் ஒருவறும்  கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் மன்னராகத் திகழ்ந்தவர்   மன்னர் வல்வில் ஓரி

மன்னர் மலையமான் திருமுடிகாரி, சேர மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறையின் துணை கொண்டு மன்னர் வல்வில் ஓரி மீது படையெடுத்துச் சென்று போரில் வல்வில் ஓரியை கொன்று அந்த நாட்டை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார் .

மலையமானின் வளர்ச்சி கண்டு கிள்ளிவளவன் அவர் மீது போர் தொடுத்து சென்றார். மன்னர் கிள்ளிவளவன் போரில் மலையமான் திருமுடிகாரியை கொன்று அவரது இரு மகன்களையும்  சிறைபிடித்தார். மலையமானின் மகன்களை யானை ஏற்றி கொல்ல உத்தரவும் இட்டார். மன்னர் உத்தரவை  அறிந்த புலவர் கோவூர் கிழார் மன்னர் கிள்ளிவளவனிடம் சென்று மலையமானின் மகன்களின் உயிருக்காக மன்றாடி அவர்களை விடுதலை செய்தார்

சங்ககால பாண்டிய மன்னருள்  ஒருவர் பழையன் மாறன். இவர்  கூடல் எனப்பட்ட மதுரையில் இருந்துகொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தார். கிள்ளிவளவன் பாண்டிய நாட்டின் தலைநகர் கூடல்  மீது படையேடுத்து சென்றார்.   இந்த போரில் கிள்ளிவளவன் தோற்றார் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் புலவர் நக்கீரர் மன்னர் கிள்ளிவளவனின் குதிரைகளையும், யானைகளையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டது பற்றி பாடியுள்ளார்.

மன்னர் கிள்ளிவளவன் செய்த போர்களின் சேரனுடன் செய்த  போர் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது. கிள்ளிவளவன் சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியது  கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் கரூரை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டி  போரை நிறுத்துமாறு கிள்ளிவளவனிடம்  வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் மன்னர் கிள்ளிவளவன்  சேர மன்னனை போரில் தோற்கடித்து  கரூர் நகரை நிர்முலமாக்கினார். அழகிய கரூர் நகரின் அழிவு பற்றி  மாறோக்கத்து நப்பசலையார் என்னும் சங்ககால பெண் புலவர் பாடியிருக்கிறார்.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கதில் அமையப்பெற்ற  அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயில் கிள்ளிவளவனால் கட்டப்பட்டதேயாகும். மன்னர் தர்மவர்ம சோழன் கட்டிய கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் அலையுண்டு மண்ணில் மறைந்தது. மண்ணில் மறைந்த கருவறை பின்னர் மன்னர் கிள்ளிவளவனால் கண்டுபிடிக்கப்பட்டு அதைச்சுற்றி பின்னர் கோவில் கட்டப்பட்டது,

கிள்ளிவளவன் ஆட்சியின் கடைசி காலத்தில், கரிகால சோழன் காலத்திலிருந்து சோழப்பேரரசிர்கு உட்பட்ட சிற்றரசர்களாக இருந்த மன்னர்கள் சுயாட்சி வேண்டி தொடர்ந்து போரிட்டு அதில் வெற்றியும் பெற்றனர் என்பது தெரியவருகிறது. இதன்முலம் கரிகால சோழன் காலத்தில் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்யம் அதன் வலுவை கிள்ளிவளவனின் காலத்தில் இழக்க தொடங்கியது என்பதுவும் தெளிவுறத் தெரிகின்றது.

கிள்ளிவளவன் இறந்த இடம்  குளமுற்றம் என்று இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள் வாயிலாக தெரிகிறது. எனினும்  இவன் இறந்த இடமாகிய குளமுற்றம் எங்குள்ளது என்றோ, மன்னர் கிள்ளிவளவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறப்படவில்லை. 

புலவர் கோவூர் கிழார் பாடியது,

காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.