பாண்டிய மன்னன் அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். மன்னன் அரிகேசரியின் மறைவுக்குப்பிறது பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். மன்னன் கோச்சடையான் ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். மன்னன் கோச்சடையான் ரணதீரன் படை மிகவும் பலம் மிக்கவன், கடல் அளவு சேனையினை உடையவன். மிக்க போர் திறன் கொண்ட பாண்டிய மன்னன் கோச்சடையான் ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் ஆகிய மன்னர்களை போரில் வென்றவன்.
படப்பெயர்கள்
மன்னன் ரணதீரன் பல போர்களில் வென்று கோச்சடையான், செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் என்று பல படப்பெயர்களை பெற்றான்.
போர்கள்
மன்னன் சொச்சடையான் ரணதீரன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு மற்றும் கொங்கு நாடு அடுத்தது கருநாடகம் என வரிசையாக பல நாடுகளையும் வென்று அந்த நாடுகளை பாண்டிய நாட்டிற்கு கப்பம் காட்டுமாறு பணித்தான்.
வேள்விக்குடிச் செப்பேடு
சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் பட்டப்பெயர் பெற்றான். வேள்விக்குடிச் செப்பேடு தரும் தகவலின் வாயிலாக நாம் இந்தத் தகவலை உறுதிசெய்யலாம்.
கேந்தூர்க் கல்வெட்டு
மன்னன் சொச்சடையான் ரணதீரன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளை வென்றான். மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் நடந்த மற்றும் ஒரு போரில் வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இந்தத் தகவல்களை நாம் கேந்தூர்க் கல்வெட்டு வாயிலாக உறுதி செய்துகொள்ளலாம்.
மன்னன் சொச்சடையான் ரணதீரனின் ஆட்சிக் காலத்தில் சேர மன்னன் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்தான். மேலும் சேர மன்னன் பெருமாள் நாயனார் திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுகிறது. பாண்டிய மன்னன் சொச்சடையான் ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.
Comments