பராந்தகன் – Paranthagan

மன்னன் பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான். மன்னன் பராந்தகன் நெடுஞ்சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர் பெற்றவன். பாண்டிய மன்னன் பராந்தகன் பற்றி தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை, திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது

போர்கள்

கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுடன் போர் ஏற்பட்டது. காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் பாண்டியனுக்கும் பல்லவனுக்கு போர் நடைபெற்றது. பாண்டிய மன்னன் பராந்தகன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை போரில் தோற்கடித்தான்.

வேள்விக்குடிச் செப்பேட்டு

வேள்விக்குடிச் செப்பேட்டில் பாண்டிய மன்னன் பராந்தகன் பொதிகைமலைத் தலைவன் ஆய்வேளையும், தகடூர் மன்னன் அதிகமானையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீவரமங்கலச் செப்பேடு

சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பாண்டிய மன்னன் பராந்தகன் வென்றான்.காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி, பயிரூர், புகழியூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களிலும் பராந்தகன் வென்றான். மேலும் கொங்கர் கோமானை வென்றான் என்றும் விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்தான் என்றும் சீவரமங்கலச் செப்பேடு கூறுகிறது. வேணாட்டிலிருந்து யானைகள், குதிரைகள், மற்றும் செல்வங்கள் அனைத்தையும் மன்னன் பராந்தகன் கவர்ந்து வந்தான் என்றும் தென் இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்றும் சீவரமங்கலச் செப்பேடு வாயிலாக அறியமுடிகிறது.

கோட்டை

பாண்டிய மன்னன் பராந்தகன் கரவபுரம் என்ற ஊரில் ஒரு மிகப்பெரிய கோட்டையை கட்டியதாகக் களக்குடி நாட்டுக் கவந்தபுரம் என்ற கல்வெட்டுக் குறிப்பின் மூலமாக நாம் அறியமுடிகிறது. கரவபுரம் கோட்டை பெரியதாகவும், மிகவும் வலிமை மிக்க உயரமான மதிலைக் கொண்டதாகவும் கட்டப்பட்டது. பாதுகாப்பிற்காகக் கோட்டையைச் சுற்றி அகழியும் கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டை இருந்த இடம் திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை எனக் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில பாண்டிய மன்னன் பராந்தகனின் மிகப்பெரிய அளவிலான நிலப்படை இருந்தது.

சமயம்

பெரும்பான்மையான பாண்டிய மன்னர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்தனர். மன்னன் பராந்தகன் திருமாலை வணங்கியவனாவான். சீவரமங்கலச் செப்பேட்டில் “பரம வைஷ்ணவன்தானாகி நின்றியங்கு மணிநீள் முடிநில மன்னவன்” என பராந்தகன் வைணவ சமயத்தில் வைத்திருந்த பற்றினைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. மன்னன் பராந்தகனின் ஆட்சிக் காலத்திலேயே பாண்டி நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் மன்னன் பராந்தகனின். மேலும் மன்னன் பராந்தகனின் பற்றிய செப்பேடுகள் பலவற்றில் வைணவ சுலோகங்களாக இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மன்னன் பராந்தகனின் வைணவப் பற்றினை அறியமுடிகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *