புகழ்பெற்ற ஆவி/பேய்/பிசாசு புகைப்படங்கள் – 1
லார்ட் கோம்பேர்மேர்

இந்த புகைப்படம் 1891ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கோம்பேர்மேர் நூலகத்தில் ஸிபல் கோபெர்ட் என்பவரால் எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் தெளிவற்ற ஒரு உருவம் நாற்காலியில் அமர்ந்திருப்பது தெரிகிறது. புகைப்படத்தில் உள்ள இந்த உருவம் லார்ட் கோம்பேர்மேர்-தான் என்று நம்பப்படுகிறது.
பிரட்டி ஜாக்ஸ்ன்

இந்த புகைப்படம் சர் விக்டர் கோட்டார்ட் என்பரால் 1919ம் ஆண்டு எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவரின் பெயர் பிரட்டி ஜாக்ஸ்ன் ஆகும். ஆனால் பிரட்டி ஜாக்ஸ்ன் இந்த புகைப்படம் எடுப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
எஸ். எஸ். வாட்டர்டவுன்

இந்த புகைப்படத்தில் தெரிபவர்கள் ஜேம்ஸ் கோர்ட்னி மற்றும் மைக்கேல் ஆவர். 1924ம் ஆண்டு எஸ். எஸ். வாட்டர்டவுன் என்ற கப்பலில் பணி புரிந்த இந்த இருவரும் இறந்தபிறகு மாலுமிகளில் வழக்கப்படி கடலில் புடைக்கப்பட்டனர். புதைக்கப்பட்ட பிறகு கடல் அலையில் அவர்களின் முகம் தெரிந்தது. எஸ். எஸ். வாட்டர்டவுனில் பணிபுரிந்த சக மாலுமிகளால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
பழுப்பு நிற பெண்

இந்த புகைப்படம் 1936ம் ஆண்டு நார்போல்க், இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது. பேய் இருப்பதற்கு சான்றாக இந்த புகைப்படம் இன்றளவும் விளங்குகிறது. இந்த புகைப்படம் எடுப்பதற்கு முன்னரே இந்த பழுப்பு பெண்ணை பலர் பார்த்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் பெண்ணின் துரோகத்தை அறிந்த அவள் கணவன் அவளை இந்த அறைக்குள் அடைத்து வைத்து பட்டினியால் இறக்க விட்டான் என்று தெரிகிறது.
ஆண்ட்ருஸ் குழந்தை

ஆண்ட்ருஸ் என்ற பெண்மணியால் 1947ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆண்ட்ருஸ் அவர்கள் மகளின் கல்லறையை புகைப்படம் எடுத்த புகைப்படத்தில் இந்த குழந்தை கல்லறையின் மீது அமர்ந்துள்ளது போல் தெரிகிறது. இது அவர் மகள் அல்ல என்று ஆண்ட்ருஸ் கூறியுள்ளார். இந்த குழந்தை யார் என்று தெரியவில்லை. அருகாமையில் சில குழந்தைகளின் கல்லறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைகீழ் தொங்கும் பேய்

1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ஒரு சிறிய குடும்பம் மேசையின் அருகில் அமர்ந்துள்ள தெரிகிறது. இரண்டு குழந்தைகள் அவர்களின் அன்னையின் மடி மீது அமர்ந்துள்ளனர். இது தவிர கருப்பு நிறத்தில் ஒரு பேய் தலைகீழாக தொங்குகிறது.
காரில் பேய்

மார்ச் 1959ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ஒரு பேய் காரில் காரின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
சர்ச்சில் பேய்

யாரும் எதிர்பார்க்க முடியாத இடமான சர்ச்சில் ஒரு பேய் இருந்தது புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தில் 1993ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கருப்பு நிறத்தில் உள்ள பேய் ஒன்று சர்ச்சில் நின்றவாறு உள்ளது. இது பொய்யான புகைப்படம் என்ற கருதும் நிலவுகிறது.
மாடிப்படி பேய்

1966ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பு புகை போன்ற வெள்ளை நிற பேய் ஒன்று கைப்பிடியை பிடித்தவாறு நடப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்பட நிபுணர்கள் இது உண்மையான புகைப்படம் என்றே கருதுகின்றனர்.
ராபர்ட் பெர்குசன்

போலராய்ட் என்னும் பிலிம் அற்ற காமிராவினால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ராபர்ட் பெர்குசன் நின்றவாறு பேசும் பொழுது அவரின் பின் இறந்து போன அவரின் தம்பி வால்டர் நிற்பது தெளிவாகத் தெரிகிறது.
Comments