புகழ்பெற்ற ஆவி/பேய்/பிசாசு புகைப்படங்கள் – 2
வெள்ளைப் பெண் பேய்

பீட்டர் என்பவரால் 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்ச்சில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் உள்ளது அவரின் மனைவி டயானா. இந்த புகைப்படம் எடுக்கும் பொழுது அவர் மனைவியின் பின்னால் யாரும் இல்லை. புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்டபோதே இந்த உருவத்தை கவனித்தனர். 1830ம் ஆண்டடில் இருந்தே ஒரு வெள்ளை பெண்ணின் பேய் சர்ச்சில் உலாவருவதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் கூற்று இந்த புகைப்படத்தின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமிடிவில்லி பேய்

இந்த புகைப்படம் எட் மற்றும் வார்ரென் என்பவர்களால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் தெரியும் 9 வயது சிறுவனின் பெயர் ஜான் டீபோ. ஜான் அவனின் சகோதரன், சகோதரிகள் மற்றும் தந்தை, தாய் ஆகிய ஒட்டுமொத்தக் குடும்பமும் ஜானின் மூத்த சகோதரன் ரொனால்ட்-ஆல் அமிடிவில்லி என்ற இடத்தில உள்ள அவர்களின் வீட்டில் கொல்லப்பட்டனர்.
எட் மற்றும் வார்ரென் ஆகிய இருவரும் பேய் பற்றிய ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் அகச்சிவப்பு கதிர் கேமரா-வினால் இந்த புகைப்படம் இரவில் படம் பிடிக்கப்பட்டது. இந்த அமிடிவில்லி கொலை புத்தகமாகவும் படமாகவும் பின்னாளில் வெளிவந்தது.
கல்லறை பெண்

1991ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பேய் பற்றிய ஆராய்ச்சி சங்கம் இல்லினோசிஸ் என்ற இடத்தில் ஒரு கல்லறையைப் புகைப்படம் எடுத்தனர். புகைப்படம் எடுக்கும் தருணத்தில் அந்தக் கல்லறையின் மீது யாரும் அமர்ந்த நிலையில் இல்லை. புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்டபோது கலைறையின் மீது ஒரு பெண் அமர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகின்றது.
அரிசோனா பேய்

அமெரிக்காவில் உள்ள அரிசோனா எனும் இடத்தில கான்டன் என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. புகைப்படம் எடுக்கும் பொழுது யாரும் அந்த இடத்தில் இல்லை. புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட பொழுது நண்பரின் பின் ஒருவர் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் உற்று நோக்கினால் அவர் கையில் ஒரு கத்தி பிடித்திரிப்படும் தெரியும்.
தாத்தாவின் பேய்

டெனிஸ் ரஸ்ஸல் என்ற பெண்மணி அவளின் பாட்டியை 1997ம் ஆண்டு புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தில் பாட்டியின் பின்னால் தெரிவது 1984ம் ஆண்டு இறந்து போன அவளின் தாத்தா.
பணியாளரின் பேய்

1999ம் ஆண்டு இங்கிலாந்தில் லிவர்பூல் எனும் இடத்தில் உள்ள ஒரு சர்ச்சில் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்படத்தில் தெளிவாக ஒரு கருப்புநிற உடை அணிந்த மனிதன் தெரிகின்றான். இந்த சர்ச்சில் முன்னாளில் வேலை செய்த ஒருவரின் ஆன்மா என்று நம்பப்படுகிறது.
மணிலா பேய்

2000ம் ஆண்டு மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு தோழிகள் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தின் வலது புறத்தில் ஒரு பேயின் கை கருப்புநிற உடை அணிந்த பெண்ணை பற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மேரி லீ

2006ம் ஆண்டு அமெரிக்கா, கென்டகி என்னும் இடத்தில உள்ள பாழடைந்த ஒரு பழைய மருத்துவமனையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. கைவிடப்பட்ட இந்த மருத்துவமனை காசநோய்க்காக செயல்பட்டது. மருத்துவமனை செயல் பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் பலர் இந்த மருத்துவமனையில் இறந்துள்ளனர். புகைப்படத்தில் தெரியும் பெண்ணின் பெயர் மேரி லீ. இந்த மருத்துவமனையில் மேரி லீ செவிலியாகப் பணி புரிந்தவர்.
மேரி லீ இந்த மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு மருத்துவரால் கற்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
துறவியின் பேய்

1985ம் ஆண்டு ஒரு புகைப்படத்தில் துறவியின் பேய் ஒன்று பதிவாகியுள்ளது. வட்டமிட்ட இடத்தில உள்ளது ஒரு துறவியின் பேய் ஆகும். இந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் இப்படிப்பட்ட உடை அணிந்த ஒருவரை யாரும் பார்க்கவில்லை.
பேய் விமானி

1987ம் ஆண்டு சாயர் என்ற வயதான பெண்மணி அவரின் தோழியுடன் இங்கிலாந்தில் உள்ள ஒரு விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு விஜயம் செய்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுக்கும் பொழுது விமானியின் இருக்கையில் யாரும் அமரவில்லை. புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட பொழுது விமானியின் இருக்கையில் ஒரு விமானியின் பேய் தெளிவாக புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
சிறுவனின் பேய்

2008 ஆண்டு நீல் என்ற நபர் அவரின் நண்பனின் திருமணம் நடைபெற இருந்த இடத்தை புகைப்படம் எடுத்தார். இந்த இடத்தில ஒரு சிறுவனின் பேய் நடமாடுவதாகவும் அதைப் பலர் முன்னரே பார்த்துள்ளதாகவும் தெரிகிறது. நீல் எடுத்த இந்த புகைப்படத்தில் அந்த சிறுவனின் பேய் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
Comments