
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இதற்கு முன்னர் இயக்கிய சர்கார் படம் வசூலை அள்ளியது போல் இந்தப்படமும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167வது திரைப்படம் ஆகும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாய் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் தம்பி ராமைய்யாவும் நடித்துள்ளனர்.
டைரக்டர் ஷங்கரின் எந்திரன் 2.0 திரைப்படத்தில் பிரபலமான வட இந்திய நடிகரானஅக்க்ஷை குமார் நடித்தது எல்லோரும் அறிந்ததே. அதே போல் இந்தத் திரைப்படத்திலும் மற்றும் ஒரு பிரபலமான வட இந்திய நடிகரான சுனில் ஷெட்டி இந்தப்படத்தில் நடித்துள்ளார். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சுனில் ஷெட்டி பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 9ம் தேதி அன்று வெளியாகவுள்ள தர்பார் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலை விடுமுறையை ஒட்டி வெளிவரும் இந்தத் திரைப்படம் வசூலை அள்ளும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பத்திரிகையாளர்களின் அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு, இந்த இடம் அரசியல் சம்பந்தமான இடம் அல்ல மற்றும் ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் அரசியல் பேசுவது முறையாகாது எனவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
சுனில் ஷெட்டியைப் பற்றிக் கேள்விகளுக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவரும் சுனில் ஷெட்டி ஒரு திறமையான நடிகர் எனவும் தர்பார் படத்தின் இறுதியில் தானும் சுனில் ஷெட்டியும் நேருக்கு நேர் மோதும் காட்சியில் சுனில் ஷெட்டி மிகவும் திறமையாக நடித்துள்ளார் எனவும் மக்கள் மத்தியில் அந்தக்காட்சி நிச்சயம் பாராட்டைப்பெறும் எனவும் கூறினார்.