பல்யானைச் செல்கெழு குட்டுவன்

சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் புகழ் பெற்ற சேர மன்னன்  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பியும் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனின் இரண்டாம் மகனும் ஆவான்.

சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடன் நடந்த ஒரு போரில் இறந்தான் என்றும் அதைத் தொடர்ந்து இவன் சேர நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான் என்றும் தெரிகிறது. சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து பல்யானைச் செல்கெழு குட்டுவன் மீது பாடப்பட்டுள்ளது. பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர் பல்யானைச் செல்கெழு குட்டுவன் பற்றி பாடியுள்ளார். இந்தப் பாட்டைத் தவிர வேறு எந்த ஒரு சங்க காலப் பாடலிலும் இவன் பெயர் காணப்படவில்லை.

“அடுநெய் ஆவுதி, கயிறு குறுமுகவை,
ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,
கான் உணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி,
தொடர்ந்த குவளை, உருத்துவம் மவிர் நிறை,
வெண்கை மகளிர், புகன்ற ஆயம்”

“ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை
குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல்ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி”
(பாடல்-1)

குட்ட நாட்டின் மன்னன்  உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவன் நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளும் விரும்புவார் என மேலே உள்ள இந்தப் பாடல் வரிகள் கூறுகின்றன

அண்ணலம் பெருங் கோட்டகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ
(பாடல் -2)

அகப்பா என்பது மலையின் மீது அமைத்த ஒரு ஊர். இந்த ஊரில் அகழிகள் கொண்ட வலிமையான ஒரு கோட்டை உம்பற் காட்டுப் பகுதியில் இருந்தது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் அந்தக் கோட்டையைத் தன் படை வலிமையால் வென்று தன் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான் என்று மேலே உள்ள இந்தப் பாடல் வரிகள் கூறுகின்றன.

“நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே”
 (பாடல்-4)

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான் என்று பல்யானைச் செல்கெழு குட்டுவனின் கொடைத் திறத்தை பற்றி  மேலே உள்ள இந்தப் பாடல் வரிகள் விவரிக்கிறது.

நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
(பாடல்-4)

நிலம், நீர், காற்று, தீ, வானம் என்ற ஐந்தையும் அளந்து அறிய முடிந்தாலும்   பல்யானைச் செல்கெழு குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது எனக் மேலே உள்ள இந்தப் பாடல் வரிகள் விளக்குகின்றன.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் சிறந்த கொடை வள்ளலாகத் திகழ்ந்தான். சேர நாட்டின் யானைகளின் உதவி கொண்டு இரண்டு கடல்களின் நீரைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான். திண்டுக்கல் மாவட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு குன்றுகளில் ஒன்று பெரியதாயும் மற்றொன்று சிரியதாயும் அமைந்துள்ளது. பெரிய குன்று துரியாதீத மலை மற்றும் துரியோதன மலை என்று இந்தப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். சிறு குன்றுதான் அயிரை மலை. இந்தப் பகுதி மக்கள் இந்தக்  குன்றுதான் ஐவர் மலை என அழைக்கிறார்கள்.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள் சேர நாட்டை சிறப்பாக ஆட்சி புரிந்தான். பின்னர் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் குருவான நெடும்பார தாயனார் என்பவருடன் காட்டிற்குள் தவம் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் கூறப்படுகிறது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டான். இவன் ஆட்சி காலத்தில் சேர நாடு அதன் ஆதிக்கத்தை பரப்பியதாகத் தெரிகிறது. சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் பாடல் வாயிலாக நாம் அறியமுடிகிறது.

முக்கியப் போர்கள்

உம்பற்காடு

உம்பற்காட்டைத் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். தற்போது இந்த இடம் ஆனைமலைக் காடுகள் அழைக்கப்படுகிறது. உம்பல் என்னும் சொல்லுக்கு யானை என்பது பொருள். யானைகள் அதிகம் உள்ள இந்த இடம்  சங்ககாலத்தில் உம்பற்காடு எனப்பட்டது. அகழி கொண்ட பலம் மிக்க அகப்பாக் கோட்டையை உழிஞைப்போரில் அழித்தான். செருப்பு நாட்டு மக்கள் பூழியர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.தோட்டி மலைக் கோட்டையை அழித்தான்

அகப்பாக் கோட்டை

அகப்பா என்பது மலைமீது இருந்த ஓர் ஊர். அகப்பாக் கோட்டை அரசன் வண்டன். கோட்டையைச் சுற்றி அகழி இருந்தது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொங்குநாட்டை போரில் வென்று தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்த பின்னர் இந்தக் கோட்டையைத் தாக்கி வென்றான்.

முதியர்

முதியர் என்பவர்கள் சங்க காலக் குடிமக்கள். முதுமலைக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தமையால் இவர்கள் முதியர் என்று அழைக்கப்பட்டனர்.பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவர்களோடு நட்புறவு கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியைப் பங்கிட்டுத் தந்து ஆளச் செய்தான்.

செருப்பாழி

பாழி என்பது சங்ககால மலைக்காடுகளில் ஒன்று. ‘பாழிச்சிலம்பு’ என்னும் பெயர் இதனை உணர்த்துகின்றது. இது சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்றாக விளங்கியதால் இதனைச் ‘செருப்பாழி’ என்றனர். மிதியல் செருப்பு’ என்பது இதன் விளக்கப் பெயர். செருப்பாழியின் மன்னன் பெயர் நன்னன். செருப்பாழியின் தலைநகரத்தின் பெயர் ‘பாரம்’ . படைத்தலைவனின் பெயர் மிஞிலி. செருப்பாழி நாட்டைக் கைப்பற்றித் தனதாக்கிக்கொண்டதால் பல்யானைச் செல்கெழு குட்டுவன், “மிதியல் செருப்பின் பூழியர் கோ” எனப் போற்றப்படுகிறான்.

தோட்டி மலைக் கோட்டை

தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. யானையை அடக்க உதவும் அங்குசத்தின் தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தோட்டி மலைக் கோட்டையை வென்று அவன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.

விழாகள்

யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்களில் இருந்து நீரைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு அயிரை மலைத் தெய்வத்தை வழிபட்டான்

இறுதிக் காலம்

இறுதிக் காலத்தில் நெடும்பார தாயனார் காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான்

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *