முதலாம் குமாரவிஷ்ணு
முதலாம் குமாரவிஷ்ணு என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனின் ஆட்சி காலம் பற்றி போதிய தகவல்கள் இல்லை. முதலாம் குமாரவிஷ்ணு பல்லவர் பரம்பரையில் ஐந்தாம் மன்னன் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் முதலாம் குமாரவிஷ்ணு ஆட்சி காலத்திலேதான் காஞ்சி சோழர்கள் ஆட்சியிலிருந்து பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது என்ற கருத்தும் நிலவுகிறது. இவனது காலம் கி .பி. 250ம் ஆண்டிலிருந்து கி.பி. 350ம் ஆண்டிற்குள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விஷ்ணுகோபன்
விஷ்ணுகோபன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட இடைக்காலப் பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் ஆட்சி காலத்தில் மயூரவர்மன் என்பவன் பல்லவருக்கு எதிராகப் புரட்சி செய்து கடம்ப அரசை கி.பி.350ம் ஆண்டு நிறுவினான்.இதை பயன்படுத்து கொண்டு கங்கர்கள் கி.பி.355ம் ஆண்டு தன்னாட்சி அடைந்தார்கள்.
ஆட்சிக் காலம்
விஷ்ணுகோபன் பல்லவர் பரம்பரையில் வந்த பத்தாம் மன்னன். இவன் ஆட்சி காலத்தில் சோழர்கள் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காஞ்சியைக் கைப்பற்றினர். விஷ்ணுகோபன் குப்தப் பேரரசர்களுள் ஒருவனான சமுத்திரகுப்தர் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான். இதிலிருந்து இவனது ஆட்சிக்காலம் நாலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது கி.பி 335ம் ஆண்டு முதல் கி.பி.380ம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததை அறியலாம்.
முதலாம் கந்தவர்மன்
இவனின் பேரனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400ல் ஆரம்பிப்பதாலும் இவனது தந்தையான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் இந்த முதலாம் கந்தவர்மனின் காலம் தோராயமாக கி.பி 350ம் ஆண்டு முதல் கி.பி.375ம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதி என கணிக்கப்படுகிறது.
வீர வர்மன்
வீர வர்மன் அல்லது வீரகூர்ச்சவர்மன் என்பவன் மற்றும் ஒரு இடைக்காலப் பல்லவ மன்னன். இவனது மகனான இரண்டாம் கந்தவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 400ல் ஆரம்பிப்பதாலும் இவனது பாட்டனான முதலாம் குமாரவிட்ணுவின் காலம் நாலாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி எனத் தெரிவதாலும் வீர வர்மனின் காலம் தோவராயமாக கி.பி 375ம் ஆண்டு முதல் கி.பி.400ம் ஆண்டு வரை எனக் கொள்ள முடியும்.
இரண்டாம் கந்தவர்மன்
இவனின் முதல் மகனான சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436ல் ஆரம்பிப்பதாலும் இந்த இரண்டாம் கந்தவர்மனைப் பற்றிய பட்டயம் இவன் 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று தெரிவிப்பதாலும் இவன் தோவராயமாக கி.பி.400 – 436 வரை ஆண்டதாகக் கொள்ள முடியும். இரண்டாம் கந்தவர்மனுக்கு முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் விட்ணுகோபன், இரண்டாம் குமாரவிட்ணு என்று மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரின் கீழ் வந்தவர்கள் மாறி மாறி காஞ்சியை ஆண்டதால் இவனுக்கு பின் வந்த மன்னர்களின் வரிசை மற்றும் காலத்தை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
முதலாம் சிம்மவர்மன்
முதலாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவ மன்னர்களுள் ஒருவன். பாடலி என்னும் சிற்றூரில் சர்வநந்தி என்ற சமண துறவியால் லோக விலாபம் என்ற திகம்பர சமண நூல் திருத்தி அமைக்கப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட நூலின் காலம் காஞ்சி நகர பல்லவர் அரசனான இரண்டாம் சிம்மவர்மனின் 22ஆம் ஆட்சியாண்டாகும். அதாவது கி.பி . 458ம் ஆண்டு. இதனால் இரண்டாம் சிம்மவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 436 ம் ஆண்டு முதல் கி.பி. 458ம் ஆண்டு வரையில் எனக் கொள்ளலாம்.அதே சமயம் பல்லவ வம்ச வரலாற்று ஆவணம் ஒன்று அவனின் ஆட்சிக்காலம் 436-460 என்று கூறுகிறது. அதனால் லோக விலாபம் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் முதலாம் சிம்மவர்மன் ஆட்சி செய்ததாக தெரிகிறது.
இரண்டாம் விஷ்ணுகோபன்
இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை இவன் தம்பியான இரண்டாம் குமாரவிஷ்ணு என்ற பல்லவன் மீட்டான் என்றும் பட்டயங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இதனால் இவனின் ஆட்சிக்காலம் காலம் ஏறக்குறைய இவனின் சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் குமாரவிட்ணு போன்றோரின் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.
இரண்டாம் குமாரவிஷ்ணு
இரண்டாம் கந்தவர்மனின் மகனான இவன் புத்தத் துறவியாகி போதிதர்மர் என்ற பெயரில் சீன தேசம் சென்று மகாயன புத்த மதத்தை பரப்பினார். புத்த மதம் பரப்ப ஏதூவாக களரியையும் மருத்துவத்தையும் கற்றுக் கொடுத்தார். பின்னாளில் தாமோ என்று அழைக்கப்பட்ட இவர் சீனர்களுக்கு கற்றுக்கொடுத்ததுடன் குங்பூவாகவுன் கரேத்தேவாகவும் தற்போது அறியப்படுகிறது.
மூன்றாம் கந்தவர்மன்
முதலாம் சிம்மவர்மனின் மகன் மூன்றாம் கந்தவர்மன். ஐந்தாம் நூற்றாண்டு மத்தியில் காண்க நாட்டை ஆண்ட கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் என்ற இரு பல்லவ அரசர்களால் நான் அரசகட்டில் ஏறினேன் என்று கூறுவதால் மூன்றாம் கந்தவர்மனின் காலம் கிபி.460ம் ஆண்டு முதல் கி.பி.475ம் ஆண்டு வரையில் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இரண்டாம் சிம்மவர்மன்
நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மன்னருள் முதல்வன் முதலாம் கிருஷ்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருஷ்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இரண்டாம் சிம்மவர்மனாக இருக்கக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால் இவனது காலம் கிபி.470ம் ஆண்டை ஒட்டி இருக்கும் என்று தெரிகின்றது.
புத்தவர்மன்
புத்தவர்மனின் தந்தையான இரண்டாம் குமாரவிஷ்ணுவின் காலம் கி.பி. 436-458 என்பதாலும், காஞ்சியைக் கைப்பற்றிய குமாரவிஷ்ணுவின் மகனான புத்தவர்மன் சோழருடைய கடல் போன்ற சேனைக்கு வடவைத்தீ போன்றவன் என்று ஐந்தாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனின் காலம் கிபி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் அமைந்தது என்று கொள்ளலாம். அக்காலத்தில் சோழர்கள் களப்பிரரின் கீழ் இருந்ததால் களப்பிரர்களின் கீழ் வந்த சோழர்களையே இவன் எதிர்த்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
முதலாம் நந்திவர்மன்
மூன்றாம் கந்தவர்மனின் மகன் முதலாம் நந்திவர்மன்.இவனது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் அமைந்தது எனக் கொள்ளலாம். தென்னிந்தியாவில் சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர் ஆகியவர்களே தங்களை நாகர்கள் எனக்கூறினர். இவர்களில் சூட்டுநாகர் முதலாம் நந்திவர்மன் காலத்தில் மறைந்துவிட்டனர்.
மூன்றாம் விஷ்ணுகோபன்
கதம்ப அரசனான இரவிவர்மன் காஞ்சி மன்னனான சண்டதண்டனை அழித்தான் என்று இரவிவர்மனின் பட்டயத்தில் உள்ளதாலும் இந்த விஷ்ணுகோபவர்மன் தன்னை உக்கிரதண்டன் எனக்கூறுவதாலும் இவனே அந்த சண்டதண்டன் என ஆராய்ச்சியாளர்கள் கருடுகின்றனர். இவன் காலத்தை கி.பி. 560ம் ஆண்டுக்கு மேல் என்று ஆராய்ச்சியாளர் கணிக்கின்றனர்.
மூன்றாம் குமாரவிஷ்ணு
இவனது காலமும் ஆறாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியில் அமைந்ததாகக் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மூன்றாம் சிம்மவர்மன்
இவனது மகனும் பிற்காலப் பல்லவர்களில் முதல்வனும் ஆன சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. 575-600. சிம்மவிஷ்ணுவுடன் போர்புரிந்த சாளுக்கிய அரசர்களான முதலாம் புலிகேசி மற்றும் அவன் மகனான முதலாம் கீர்த்திவர்மன் ஆகியோரின் காலம் கி.பி. 560-598. மேலும் மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான் என்று ஆறாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்ததை அறியாலாம்.
Comments