மகேந்திரவர்ம பல்லவன்

பல்லவ மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன். களப்பிரரை ஒடுக்கியவனும் பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல்வனுமாகிய பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகன் இவன்.

ஆட்சிக்காலம்

மன்னன் சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து பல்லவ ஆட்சிபீடம் ஏறிய மகேந்திரவர்ம பல்லவன் கி.பி.600ம் ஆண்டு முதல் கி.பி. 630ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளை ஆண்டான் எனத் தெரிகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவனை முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடுகிறார்கள். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவன் கி.பி. 630ம் ஆண்டு வரையில் ஆண்டான் என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், இவன் பதவியேற்ற ஆண்டில் கருத்து வேறுபட்டு நிற்கின்றனர். கி.பி 600, 610 மற்றும் 615ம் ஆண்டு என பல்வேறு ஆண்டுகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவன் பதவியேற்ற ஆண்டு எனக் கருதுகின்றனர்.

போர்கள்

முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்துவன்தான். இரண்டாம் புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டப் போரில் பல்லவர்படை தோற்கடிக்கப்பட்டது. இப்போரில் மகேந்திரவர்ம பல்லவன் இறந்தான்.

பட்டப்பெயர்கள்

மத்தவிலாசன்,சித்திரகார புலி,சங்கீரண கதி,சத்ருமல்லன்,அவனிபாஜன்,பரிவாதனி

குடைவரைக் கோயில்

மகேந்திரவர்ம பல்லவன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். மகேந்திரவர்ம பல்லவதான் உலகப் புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள ‘இலக்சிதன் கோயில்’ என அழைக்கப்படும் குடைவரை கோயில்தான் முதன் முதலில் கட்டப்பட்ட குடைவரை கோயில் என்று கருதப்படுகிறது. இந்தக் கோயிலைக் கட்டியவன் மகேந்திரவர்ம பல்லவன்.

மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலில் காணப்படும் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக மகேந்திரவர்ம பல்லவன் அறிவித்துள்ளான். மேலும் மகேந்திரவர்ம பல்லவனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.

மத்தவிலாச பிரஹசனம்

மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நாடகமாகும். இந்த நூலின் வாயிலாக இவன் தந்தை மன்னன் சிம்மவிஷ்ணுவைப் பற்றிய தகவல்களை நாம் அறியமுடிகிறது. இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவன் இயற்றியுள்ளான்.

சமயம்

மகேந்திரவர்ம பல்லவன் இடையில் சமண மதத்தைத் தழுவினான். பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று சைவ சமயத்திற்கு மாறினான்னென்று தெரிகிறது. மகேந்திரவர்ம பல்லவனை அடுத்து பல்லவ மன்னர்களில் புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்ம பல்லவன் அரியணையேறினான்

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *