ஆட்சி
முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனுக்குப் பின்னர் இராஐசிம்மன் என்று அழைக்கப்பட்டவனும் பல்லவ மன்னர்களுள் உலகப்புகழ் பெற்றவனும் ஆன இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாகப் பதவியேற்றான். இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.700ம் ஆண்டு முதல் கி.பி. 728 ம் ஆண்டு வரையில் சற்றேறக்குறைய 30 ஆண்டுகாலம் பல்லவ சாம்ராஜ்யத்தை ஆட்சிபுரிந்தான்.
அமைதிகாலம்
மாமல்லன் என்று அழைக்கப்பட்ட மன்னன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனாலும் அவன் பின்னர் ஆண்ட மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனாலும் சாளுக்கியர்களின் படை பலம் மிகவும் குறைக்கப்பட்டிருந்தது. சாளுக்கியர்களின் தோழமை நாடுகளான பாண்டியர்களும் மற்றும் கன்னட மன்னர்களும் போர் புரிய பலமற்று இருந்தனர். இதனால் பல்லவ சாம்ராஜ்யத்தில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் எங்கும் அமைதி நிலவியது.
சமயம், இலக்கியம்
பல்லவ சாம்ராஜ்யத்தில் எங்கும் அமைதி நிலவியதால் சமயம், இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டது. இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். இவன் ஆட்சிக்காலத்தில் சைவசமயம் முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. சமஸ்கிருத இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் பெரிதும் அக்கறை காட்டியதாகத் தெரிகின்றது. சமஸ்கிருதப் புலவர்களை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆதரித்துவந்தார்.
கோயில்
உலகப்புகழ் பெற்ற பலவர்களின் சிற்பத் திறமையை இவ் உலகுக்கு எடுத்துக்காட்டும் குடைவரை கோயில்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டன.
மாமல்லபுரக் கோயில்
மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவையே. ஒற்றைக்கல் யானை, அருச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.
கைலாசநாதர் கோயிலும்
காஞ்சிபுரத்திலுள்ள எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது ஆகும். இது தவிர இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் பல கோயில்களை காட்டியுள்ளார்.
இறுதிக்காலம்
இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்துவந்தனர். இந்தப் போரில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் தனது மூத்த மகனை இழந்தார். இதன் பின் சிறிது காலத்தில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனும் இறந்தார்
Comments