இரண்டாம் நந்திவர்மன்

பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் மேலை கங்கை மன்னன் சிறீபுருசனால் இரண்டாம் பரமேசுவரவர்மன் போரில் கொல்லப்பட்டான். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் போரில் வாரிசுகள் ஏதும் அற்ற நிலையில் இறந்தான். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவ மன்னர்களின் பரம்பரை முடிவுற்றது.

இரண்டாம் நந்திவர்மன்

இரண்டாம் நந்திவர்மன் கி.பி 732ம் ஆண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாகப் பதவியேற்றான். மன்னர் வாரிசு நிலையில் பல்லவ நாடு எதிரிகளின் கைகளின் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் சென்றனர். கம்புஜதேசம் / கம்புஜ நாடு தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.

கம்புஜதேசம்

பல்லவ மன்னன் மூன்றாம் சிம்மவர்மனின் இளைய மகனும் மற்றும் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்லவ சாம்ராஜ்ஜியத்தை வலுப்பெறச் செய்த சிம்மவிஷ்ணுவின் தம்பியுமான பீமவர்மன் கம்புஜதேசதில் பல்லவர் வழி வந்த சென்லா வம்சத்தை துவக்கி வைத்தான். கம்புஜதேசம் அல்லது காம்புஜ நாடு என்பது தற்போதைய கம்போடியா, வியட்னாம் மற்றும் லாவோஸ் நாடுகளை உள்ளடக்கிய நாடாகும்.

சென்லா அரச வம்சம்

சென்லா அரச வம்சம் கம்புஜதேசம் கடைசி புன்னன் அரசர் ஜெயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. ருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர். இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்து மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார், பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார்.

பீமவர்மனின் பரம்பரையில் வந்த மன்னன் கடவேச அரிவர்மன் என்பவன் கம்புஜதேசத்தை ஆட்சிபுரிந்து வந்தான். கடவேச ஹரி வர்மனுக்கு நான்கு மகன்கள். இந்த நான்கு இளவரசர்களில் பல்லவ நாட்டிற்கு வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த நந்திவர்மனை அழைத்து வந்து மன்னரற்று இருந்த பல்லவ நாட்டிற்கு மன்னனாக முடிசூடினர்.

மன்னனாகப் படவியேற்றபோது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது 12தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன.

போர்கள்

இரண்டாம் நந்திவர்மன் சிறுவனாக இருந்தமையால் பகைவர்கள் பல்லவ நாட்டின் மீது பல்லவநாட்டின் மீது படையெடுத்தார்கள். அப்பொழுது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது பதின்மூன்று. இந்தப் போரில் பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், பல்லவர் படைகளின் பலத்தால் ஆட்சிப் பகுதியில் எந்தவிதமான இழப்பும் இல்லாமல் பல்லவ சாம்ராஜ்ஜியம் மீண்டது.

இரண்டாம் நந்திவர்மன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள், பெரும்பாலும் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி அமைதியாக இருந்ததாகவே தெரிவிக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் பாண்டியர்கள் இவனிடம் போரில் தோல்வியுற்றனர் என்று தெரிகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இம்மன்னனின் ஆட்சி பலமாக நிறுவப்பட்டிருந்தது உறுதியாகிறது.

கோயில்

தற்போதைய நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயம் இரண்டாம் நந்திவர்மனால் கட்டுவிக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் இவரது காலத்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது

மறைவு

பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் கி.பி 769ம் ஆண்டு இறந்தார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *