மேலைச் சாளுக்கியர்களின் முதன் மன்னன் இரண்டாம் தைலப்பன் ஆவான். இவன் ஆகவமல்லன் என்றும் அழைக்கப்பட்டான். மேலும் நுர்மடி தைலப்பன் மற்றும் சத்யஸரய குலதிலகா போன்ற பட்டங்கழும் இவனுக்கு உண்டு.
இரண்டாம் தைலப்பன்தான் மீண்டும் மேலைச் சாளுக்கிய பேரரசை மறுநிர்மாணம் செய்தவன் ஆவான். 220 ஆண்டுகள் சிற்றரசர்களாக இருந்த சாளுக்கிய அரச மரபை மீண்டும் பேரரசாக ஆக்கினான்.மேலை சாளுக்கிய பேரரசின் அதிகாரம் ஆறாம் விக்ரமாதித்தன் காலத்தில் அதன் உச்ச நிலையை அடைந்தது.
மீண்டும் உயர்நிலையை அடைந்த இந்த சாளுக்கிய மரபு மேலைச் சாளுக்கியர் , கல்யாணிச் சாளுக்கியர், பிற்காலச் சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இரண்டாம் தைலப்பன் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் பிரபல கன்னடக் கவிஞர் ரண்ணா ஆவார் . கடாக் பதிவுகளில் இருந்து. இவன் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாக அறியப்படுகிறது.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் இராஷ்டிரகூட மன்னர்கள் வலிமைபெறத் துவங்கினர். இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்கன் அவனின் ஆட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்யத் துவங்கினான். மன்னன் தந்திதுர்கன், தற்போதைய எல்லோராவைச் சுற்றித் தனது இராஷ்டிரகூட பேரரசை விரிவாக்கினான். இதைத் தொடர்ந்து தந்திதுர்கன், சாளுக்கியப் பேரரசின் வடக்கு மாகாணங்களின் கட்டுப்பாட்டைக் குலைத்தான்.
செல்வாக்குடன் இருந்த வாதாபி சாளுக்கியர்களுக்கு எதிராக எழுச்சிப் பெற்று அதிகாரத்தைக் இராஷ்டிரகூட மன்னர்கள் கைப்பற்றி இருந்தனர். 200 ஆண்டுகளாக இராஷ்டிரகூட அரசிற்கு அடங்கிய சிற்றரசாக சாளுக்கிய மன்னர்கள் இருந்தனர். இந்நிலையில் இராஷ்டிரகூட மன்னர்களுக்கு அடங்கி ஆட்சிசெய்து கொண்டிருந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு தனது சுயாட்சியை அறிவித்து தனது பேரரசை நிறுவினான்.
தைலப்பன் இராஷ்டிரகூட மன்னனான நான்காம் இந்திரன் மற்றும் அவனது படைகளைக் கோதாவரி படுகையில் நடந்த போரில் தோற்கடித்தான்.
இராஷ்டிரகூடர்களை தோற்கடித்த இரண்டாம் தைலப்பன் மான்யகட்டாவில் இருந்து ஆண்டான். பின்னர் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள பல ஆண்டுகள் செலவழித்தான். தக்கானத்தின் நர்மதை , காவிரி . ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியில் தனது ஆட்சியை நிலைநிறுத்தினான். மால்வா அரசன் சாளுக்கியர்களைத் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கையில் வடக்கில் இருந்து சாளுக்கிய அரசின் மீது படையெடுத்து வந்தான். படையெடுப்பை முறியடித்த தைலப்பன் மால்வா அரசன் பரமரா மஞ்சாவையும் கைதியாகப் பிடித்தான். பிடிபட்ட மால்வா அரசன் பிடிபட்ட நிலையில் கைதியாக இறந்தான்.
சோழ மன்னனாக இராஜராஜ சோழன் ஆனபின்பு சோழ அரசு வடக்கு நோக்கி விரிவடைந்து மைசூர் மற்றும் பிற பகுதிகள் அடுத்த 100 ஆண்டுகளுக்குச் சோழராட்சியில் நீடித்தது. இரண்டாம் தைலப்பனுக்குப்பின் இவனது மூத்தமகன் சத்யஸ்ரயா 997இல் . ஆட்சிப் பொறுப்பேற்றான்.
மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான். ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.
சத்யாசிரயனுடன் போர்
இரண்டாம் தைலப்பன் இறந்த பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜ சோழன் சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்து சென்றார் . சாளுக்கிய மன்னனான சத்தியாசிரயன் இராஜராஜ சோழனின் கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது. சத்தியாசிரயன் செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜ சோழன் அளித்தான் என்று இராஜராஜ சோழன்ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.