மேலை சாளுக்கியர்கள்

மூன்றாம் சோமேசுவரன்

ஆறாம் விக்கிரமாதித்தனுக்குப் பின்னர் அவன் மகன் மூன்றாம் சோமேசுவரன் மேலை சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றான்.மூன்றாம் சோமேசுவரன் கி.பி.1126ம் ஆண்டு முதல் கி.பி.1138ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். இவன் தாயின் பெயர் சந்தலாதேவி. முதலாம் சோமேசுவரனின் வேறு பெயர்கள் திரிபுவனமல்லன், பூலோகமல்லன், சர்வனியபூபா ஆகும்

மூன்றாம் சோமேசுவரன் ஹொய்சள மன்னன் விட்டுணுவர்தனின் படையெடுத்தபோது அவனை எதிர்த்து அடக்கினான் வேங்கியின் கீழைச் சாளுக்கியர் சுதந்திரம் பெற முயன்றபோது தனது ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை இழந்தான். எனினும் தனது தந்தை விட்டுச் சென்ற பெரும் பேரரசைப் பாதுகாக்க முடிந்தது. இவன் ஒரு சமஸ்கிருத அறிஞனாவும் இருந்தான். சமஸ்கிருதத்தில் இலக்கியங்களையும் படைத்தான். மேலும் சமஸ்கிருதத்தில் தனது தந்தை ஆறாம் விக்ரமாதித்தனின் வாழ்க்கை வரலாறை “விக்ரமன்நபையுதையா” (Vikramankabhyudaya) என்ற பெயரில் எழுதினான். இந்நூல் வழியாக அக்கால கர்நாடகத்தின் வரலாற்றையும் மக்களைப் பற்றியும் அறியலாம்

இரண்டாம் ஜெகதேகவமல்லன்

இரண்டாம் ஜெகதேகவமல்லன் மூன்றாம் சோமேசுவரனைத் தொடர்ந்து மேலைச் சாளுக்கிய அரியணை ஏறியவன். இரண்டாம் ஜெகதேகவமல்லன் கி.பி.1138ம் ஆண்டு முதல் கி.பி.1151ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். இவனது ஆட்சியின்போது சாளுக்கியப் பேரரசு மெதுவாக சரிவு காண ஆரம்பித்தது. வேங்கியை முழுவதுமாக இழக்கவேண்டி இருந்தது என்றாலும், தெற்கில் போசளர்களையும், வடக்கில் சீனு, பரமர மரபுகளை இவனால் இன்னும் கட்டுப்படுத்த முடிந்தது. இவன் கன்னட இலக்கண ஆசிரியரான இரண்டாம் நாகவர்மனை ஆதரித்தான். இரண்டாம் நாகவர்மன் காவியவலோகன்னா, கர்நாடகா பாஷாபூஷசனா போன்றப் பல பிரபலமான நூல்களை எழுதியவர். இரண்டாம் ஜெகதேகமல்லன் தானே சமஸ்கிருதத்தில் சங்கீதசூடாமணி என்ற இசை பற்றிய நூலை எழுதினான்.

மூன்றாம் தைலப்பன்

மூன்றாம் தைலப்பன் என்பவன் இரண்டாம் ஜெகதேகமல்லனுக்குப் பின் மேலைச் சாளுக்கிய அரியணை ஏறியவன். மூன்றாம் தைலப்பன் கி.பி.1151ம் ஆண்டு முதல் கி.பி.1164ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். இவனுடைய ஆட்சிக் காலம் எனபது சாளுக்கியப் பேரரசின் முடிவுக் காலத்தின் துவக்கமாக இருந்தது. காகதீய அரசின் இரண்டாம் புரோல்லா என்பவன் இவனுடன் போரிட்டு தோற்கடித்து, சாளுக்கிய அரசனான இவனைச் சிறைப்பிடித்தான். இந்த நிகழ்வு இதுவரை இவனுக்கு அடங்கி இருந்த அரசர்களுக்கு இவனை எதிர்க்கத் துணிவைத் தந்தது. சீனு, ஹொய்சாளர்கள் போன்றோர் சாளுக்கியரை விட்டு விலகினர். காளச்சூரிய மன்னன் இரண்டாம் பிஜ்ஜலா என்பவன் மேலைச் சாளுக்கியரின் அரசியல் தலைநகரான கல்யாணியைக் கி.பி.1157 இல் கைப்பற்றினான். இதனால் மூன்றாம் தைலப்பன் அண்ணிகிரிக்குத் (தார்வாட் மாவட்டம் ) தப்பிச் செல்லவேண்டி இருந்தது. இறுதியாக 1162ம் ஆண்டு மூன்றாம் தைலப்பன் ஹொய்சாள அரசன் வீரநரசிம்மனால் கொல்லப்பட்டான்.

மூன்றாம் ஜெகதேகமல்லன்

மூன்றாம் ஜெகதேகமல்லன் என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். மூன்றாம் தைலப்பனுக்குப் பின் ஆட்சிக்குவந்தவன். இவனுடைய ஆட்சி காளச்சூரிய அரசன் இரண்டாம் பிஜ்ஜலா என்பவனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. மூன்றாம் தைலப்பன் கி.பி.1164ம் ஆண்டு முதல் கி.பி.1183ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான்.

நான்காம் சோமேசுவரன்

நான்காம் சோமேசுவரன் என்பவன் மேலைச் சாளுக்கிய மரபின் கடைசி அரசன் ஆவான். இவன் தனது பேரரசை வலிமைப்படுத்த முயன்றான். ஆனால் இவனால் முடியவில்லை. சியூனா, போசளர், காக்கத்தியர் ஆகிய மூன்று மரபினரும் காவிரி மற்றும் நர்மதை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரப்பில் விரிந்திருந்த மேலை சாளுக்கிய பேரரசின் நிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர். நான்காம் சோமேசுவரன் கி.பி.1183ம் ஆண்டு முதல் கி.பி.1200ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *