செஞ்சி, காளஹஸ்தி நாயக்கர்கள் வரலாறு

11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, இந்த அரசப் பிரதிநிதிகள் தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விஜயநகரப் பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். விஜயநகரப் பேரரசிலிருந்து சுயாட்சி பெற்று செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு நாயக்க மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது.

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி1508ம் ஆண்டு முதல் கி.பி.1649ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் கி.பி.1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார். பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை ஆண்டுவந்தனர். செஞ்சி நாயக்க மன்னர்கலின் ஆட்சி கி பி 1649-இல் பிஜப்பூர் சுல்தான் செஞ்சியைக் கைப்பற்றும் வரை நடைபெற்றது.

வட தமிழ்நாட்டின் தற்போதைய செஞ்சி வேலூர், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, நெல்லூர், சித்தூர், சந்திரகிரி ஆகிய பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆளுகையில் இருந்தது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலூர்க் கோட்டையை இழந்தனர்.

செஞ்சி நாயக்க மன்னர்கள்

கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
சென்னப்ப நாயக்கர்
கங்கம நாயக்கர்
வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
வேங்கடராமா பூபால நாயக்கர்
திரியம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
வரதப்ப நாயக்கர்
இராமலிங்க நாயனி வாரு
வேங்கட பெருமாள் நாயுடு
பெரிய ராமபத்திர நாயுடு
இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)

காளஹஸ்தி நாயக்கர்கள்

காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தினர் ஆவர். இவர்கள் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளை ஆட்சிபுரிந்தனர். வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் முக்கியமானவர் சென்னப்ப நாயக்கர் ஆவார். காளஹஸ்தி நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசை ஆண்ட இறுதி வம்சமான அரவிடு மரபுவினருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள்.

தமர்லா சென்னப்ப நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கர் காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார். இவர் சென்னப்ப நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார். சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா. இவர் யாச்சம நாயக்கரின் தங்கை மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்காவின் மகள் ஆவார். கஸ்தூரி ரங்கா நெல்லூர், வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . விஜய நகரப் பேரரசின் மன்னர் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான சென்னப்ப நாயக்கர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர். இன்றய சென்னை நகரம் இவரவது பெயரால் அழைக்கப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கர் திருமணம் செய்தனர்

தமர்லா வெங்கடப்ப நாயக்கர்

தமர்லா வெங்கடப்ப நாயக்கர், தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் ஆவார். விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார். தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசர் பேடா வெங்கட ராயன் ஆட்சிக்காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பேடா வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள்

தமர்லா அய்யப்ப நாயக்கர்

இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன் நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கரின் கடைசி மகனான இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவர். இவர் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். அங்கபுபாலா நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர். உஷா பரிணயம் என்னும் இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . அங்கபுபாலா பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார் . இவர் சிறந்த கவிஞரகக் கருதப்படுகிறார்

காளஹஸ்தி நாயக்கர்களும் இலக்கிய பங்களிப்பும்

மிக சிறந்த இலக்கிய நூலக கருத்தப்படுகிற உஷா பரிணயம் மற்றும் பகிஸ்வா சரித்திரம் போன்ற நூல்களை எழுதியது காளஹஸ்தி தமர்லா நாயக்கர்களே. தமர்லா வெங்கலபூபாலன் எழுதிய பகிஸ்வா சரித்திரம் என்னும் நூலில் வாயிலாக காளஹஸ்தி நாயக்கர்களின் குடும்ப வரலாற்றையும் சென்னப்பட்டினம் உருவாக்கத்தையும் அறியலாம். தமர்லா அங்கபுபாலா நாயக்கர் எழுதிய உஷா பரிணயம் என்னும் இலக்கிய நூல் மிக சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *