மௌரியப் பேரரசு வீழ்ச்சி

தசரத மௌரியர்

தசரத மௌரியர் கிமு 232ம் ஆண்டு முதல் கிமு 224ம் ஆண்டு வரை மௌரியப் பேரரசை ஆட்சிசெய்தார். இவர் அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார். இவர் அசோகரின் பேரன் ஆவார்.கிமு 224ல் மறைந்த தசரதனுக்குப் பின்னர் அவரது பங்காளி சம்பிரதி பட்டத்திற்கு வந்தார்.

பிளவு

அசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர்.வேறு வரலாற்று குறிப்புகள் தசரதனும் சம்பிரதியும் மௌரியப் பேரரசை பிரித்துக் கொண்டனர் எனக் கூறுகிறது. பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், சம்பிரதி உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர்.

வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் பந்துபாலிதா, இந்திரபாலிதா மற்றும் தசோனா போன்ற மௌரியப் பேரரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. புராணங்களில் கூறப்படுபவர்கள், தசரத மௌரியன் ஆண்ட மௌரியப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநர்களாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

அசோகரின் மறைவிற்குப் பின்பு நீண்டகாலமாக மௌரியப் பேரரசில் அரசியல் நிலைத்தன்மை இல்லாது போயிற்று. தசரத மௌரியரின் சித்தாப்பாக்களில் ஒருவரான ஜலௌகா என்பவர், வடமேற்கு மௌரியப் பேரரசின் காஷ்மீர நாட்டை தன்னாட்சியுடன் ஆண்டார்.

வீழ்ச்சி

மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். மகதப் பேரரசின் தலைநகரப் பகுதிகளைத் தவிர, பேரரசின் தொலைதூரங்களில் உள்ள மௌரியப் பகுதிகளை தசரத மௌரியனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.]

சமயம்

பௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்

வாரிசுகள்

இந்து புராணங்களின் படி, தசரதனுக்குப் பின்னர் சம்பிரதி என்பவரும், பௌத்தம் மற்றும் சமண சாத்திரங்களின் படி, குணாளன் என்பவரும் மௌரியப் பேரரசராக பட்டத்திற்கு வந்தனர் எனக் கூறுகிறது.

சம்பிரதி மௌரியன்

சம்பிரதி மௌரியப் பேரரசின் ஐந்தாம் சக்கரவர்த்தி ஆவார். இவர் பேரரசர் அசோகரின் பேரனும், கண்கள் குருடாக்கப்பட்ட அசோகரின் மகனாக குணாளனின் மகனும் ஆவார். சம்பிரதி, தனது பங்காளியான தசரத மௌரியரின் மறைவிற்கு பின் மௌரியப் பேரரசின் அரியணை ஏறியவர்.
இவர் கி.மு. 224ம் ஆண்டு முதல் கி.மு. 215ம் ஆண்டு வரையில் ஆட்சிசெய்தார்.

வரலாறு

அசோகரின் முதல் மகன் மகிந்தன் பௌத்த சமயத்தை இலங்கையில் பரப்பச் சென்றதால், குணாளன் மௌரியப் பேரரசின் பட்டத்து இளவரசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது.

குணாளன் அசோகரின் பட்டத்தரசிகளில் ஒருவரான சமணச் சமயத்தைச் சேர்ந்த் பத்மாவதியின் மகன் ஆவார். குணாளன் அரியணை ஏறிவிடக்கூடாது என்பதற்காக, சதிச் செயல் மூலம், குணாளனின் கண்கள் குருடாக்கப்பட்டது. எனவே குணாளனால் அரியணை ஏற உரிமை இல்லாது போனதால், தன் மகன் சம்பிரதியுடன், மகதத்தை விட்டு, உச்செயினுக்குச் சென்றார். பின்னர் மௌரியப் பேரரசராக தசரத மௌரியர் அரியணை ஏறினார்.

உச்செயினில் குணாளனுடன் வளர்ந்து கொண்டிருந்த சம்பிரதி, ஒரு முறை இருவரும் படாலிபுத்திரம் சென்று, அசோகரிடம் தனது அரியணை உரிமை கோரினார். தசரத மௌரியருக்குப் பின்னர் சம்பிரதிக்கு அரியணை ஏறும் உரிமை வழங்கப்படும் என அசோகர் உறுதியளித்தார். கிமு 224ல் தசரத மௌரியர் இறந்த பிறகு சம்பிரதி மௌரியப் பேரரசர் ஆனார்.

சமண சமயத்தை பின்பற்றும் சம்பிரதி 9 ஆண்டுகள் அரசாண்டர். சமண சமய இலக்கியங்களின் படி, சம்பிரதி பாடலிபுத்திரம் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டார்.[2] முன்னர் தசரத மௌரியர் ஆட்சியின் போது, ஆந்திரம் மற்றும் மைசூர் இராச்சியங்கள், மௌரியப் பேரரசிலிருந்து விடுபட்டு தன்னாட்சியுடன் ஆண்டது. சம்பிரதி ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஆந்திரம் மற்றும் மைசூர் இராச்சியங்களை வென்று மௌரியப் பேரரசில் இணைத்தார்

சாலிசுகா மௌரியன்

சாலிசுகா மௌரியன் மௌரியப் பேரரசின் 6-வது பேரரசர் ஆவார். வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த மௌரியப் பேரரசை கிமு 2015 முதல் கிமு 202 வரை 7 ஆண்டுகள் ஆண்டார்

தேவவர்மன்

தேவவர்மன் அல்லது தேவதர்மன் மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், சாலிசுகாவிற்குப் பின்னர் அரியணை ஏறிய ஏழாவது மௌரியப் பேரரசரான இவர் கிமு 202 முதல் 195 முடிய 7 ஆண்டுகள் மௌரியப் பேரரசை ஆட்சி செய்தார்

சத்தாதன்வன்

சத்தாதன்வன் அல்லது சத்தாதனுஸ் மௌரியப் பேரரசின் எட்டாவது பேரரசர் ஆவார். புராணக் குறிப்புகளின் படி, தேவவர்ம மௌரியனுக்குப் பின்னர் ஆட்சி வந்த சத்தாதன்வன் மௌரியப் பேரரசை கி மு 195 முதல் 187 முடிய ஆட்சி செய்தவர்.

இவரது ஆட்சிக் காலத்தில் பல் வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர், இவர் தம் மகன் பிரகத்திர மௌரியன் ஆட்சிக்கு வந்தார்

பிரகத்திர மௌரியன்

பிரகத்திர மௌரியன், சத்தாதன்வனுக்குப் பின் கி மு 187 முதல் 180 முடிய மௌரியப் பேரரசின் இறுதி மன்னராக இருந்தவர். பிரகத்திர மௌரியனை, அவரது போர்ப்படைத் தலைவரும், பிராமணருமான புஷ்யமித்திர சுங்கன் என்பவர் கொன்று, மௌரிய வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுங்கப் பேரரசை நிறுவினார்.

பிரகத்திரனின் ஆட்சிக்காலம்

இவரது ஆட்சிக் காலத்தில் பல் வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர் மௌரியப் படைத்தலைவர் புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியை கைப்பற்றினார்.

புராணக் குறிப்புகளின் படி, மௌரியப் பேரரசர் சாதவதன்வானிற்குப் பின்னர் வந்த பிரகத்திர மௌரியன் ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அசோகர் காலத்திய மௌரியப் பேரரசின் நிலப் பரப்புகள், பிரகத்திரனின் ஆட்சிக் காலத்தில் மிகச் சுருங்கி தலைநகர் பாடலிபுத்திரம் அளவிற்குள் சுருங்கி விட்டது.

About the author

Leave a Reply

Your email address will not be published.