1. பாங்கிரா கோட்டை, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் பகுதியில் இந்த பாங்கிரா கோட்டை அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அமானுஷ்யமான இடங்களில் இந்த பாங்கிரா கோட்டை முக்கிய இடத்தைப் பெறுகிறது. சூரிய அஸ்தமனதிற்குப் பின்னர் இந்த அமானுஷ்யமான பாங்கிரா கோட்டைக்குள் பார்வையாளர்கள் நுழைய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் தடை விதித்துள்ளது.
16 ஆம் நூற்றாண்டில் பாங்கிரா நகரில் அமைத்துள்ள இந்தக் கோட்டையில் ரத்தனாவதி என்ற இளவரசி வசித்துவந்தார். இளவரசி ரத்தனாவதி மிகவும் அழகானவள். பாங்கிரா நகரில் வசித்துவந்த மந்திரவாதியான சிங்கியா, இளவரசி ரத்தனாவதியின் அழகில் மயங்கி அவளை அடைய நினைத்தான். ஆனால் நேரான வழியில் இளவரசி ரத்தனாவதியை அடைய முடியாது என்றுணர்ந்த மந்திரவாதி சிங்கியா, மந்திரத்தின் வாயிலாக இளவரசி ரத்தனாவதியை அடைய நினைத்தான். ஆனால் மந்திரவாதி சிங்கியாவின் கேட்ட எண்ணத்தை கண்டுபிடித்த இளவரசி ரத்தனாவதி அவனைக் கொல்ல ஆணையிட்டார். இறக்கும் தருவாயில் மந்திரவாதி சிங்கியா, இளவரசி ரத்தனாவதியையும் அவள் வாழ்ந்த இந்த பாங்கிரா கோட்டையையும் சபித்துவிட்டு இறந்தான். இன்றளவும் சூரிய அஸ்தமனதிற்குப் பின்னர் கோட்டைக்குள் நுழையும் யாரும் திரும்ப வரமுடியாது என இங்குள்ள பாங்கிரா நகர மக்களால் நம்பப்படுகிறது.
2. கைதராபாத் அறிவியல் கல்லூரி, ஹைதராபாத்

ஹைதராபாத் நகரில் இந்த கைதராபாத் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் படித்துவந்த இந்தக் கல்லூரி தற்போது செயல்பாட்டில் இல்லை. தற்போது வரை இந்த அறிவியல் கல்லூரி சிதிலமடைந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. மூடப்பட்ட இந்தக் கல்லூரியின் உயிரியல் பிரிவில் இருந்த பிரேதங்களை யாரும் அப்புறப்படுத்தவில்லை. இந்தப் பிரேதங்களும் மற்றும் எலும்புக்கு கூடுகளும் இரவில் இந்தக் கல்லுரி வளாகத்தில் உலா வருவதை இங்கு வசிக்கும் மக்கள் பலரும் பார்த்ததாகக் கூறியுள்ளனர். மேலும் இந்தக் கல்லூரியின் காவலாளி மர்மமான முறையில் இறந்ததும் மேலும் திகைப்படச் செய்கிறது.
3. குல்தாரா கிராமம், ராஜஸ்தான்

குல்தாரா கிராமம், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகருக்கு அருகில் அமைத்துள்ள ஒரு கிராமமாகும். குல்தாரா கிராமதில் பெரும்பாலும் பிராமணர்கள் வசித்துவந்தனர். 1825ம் வருடம் குல்தாரா கிராமத்திலும் அதை சுற்றி இருந்த மற்ற 83 கிராமங்களில் வாழ்ந்துவந்த மக்கள் அனைவரும் ஒரே இரவில் காணாமல் போயினர். பெருந்திரளான இந்த கிராம மக்கள் எங்கு போயினர், எப்படிப் போயினர், எப்படி யாருக்கும் ஒரு தகவலும் தெரியாமல் மாயம் ஆயினர் என்பது பற்றி கடைசி வரையில் யாராலும் அறியமுடியவில்லை.
உயர் பதவியில் இருந்த ஆங்கிலேயன் ஒருவன், குல்தாரா கிராமத்தின் தலைவரின் மகள் மீது ஆசை கொண்டான் எனவும், ஒரு பெண்ணின் மானம் காப்பதற்காக அனைத்து கிராம மக்களும் இரவோடு இரவாக அவர்கள் வசித்த கிராமத்தை விடுத்தது சென்றனர் என்றும், பிராமணரான கிராமத்தின் தலைவர் அந்த இடத்தை சபித்துவிட்டுச் சென்றதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது.
4. டௌமலை, கர்சியாங், மேற்கு வங்காளம்,

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோடை வாசஸ்தலமான டார்ஜிலிங் மாவட்டத்தில் கர்சியாங் நகரம் அமைத்துள்ளது. கர்சியாங் நகரதில் உள்ள டௌமலையில் விக்டரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் டௌமலை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைத்துள்ளது. இரவில் இந்த பள்ளிகள் அமைத்துள்ள இடத்தை சுற்றி தலை இல்லாத ஒரு சிறுவனின் உருவம் அலைவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுவன் யார் என்று தெரியவில்லை. அந்த இடத்தை சுற்றி வசிப்பவர்கள் இரவில் யாரோ நடக்கும் சத்தத்தை கேட்டுள்ளனர். இங்கு சுற்றுலா வந்தவர்களில் சிலரும் இந்த தலை இல்லாத சிறுவனைப் பார்த்ததை உறுதி செத்துள்ளனர்.
5. டூமாஸ் கடற்கரை, குஜராத்

குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலில் இந்த டூமாஸ் கடற்கரை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த இடம் இறந்தவர்களின் உடலை புதைக்கும் இடமாகப் பயன்பாட்டில் இருந்தது. இப்பொழுதும் இரவில் இந்தக் கடற்கரையில் இறந்தவர்களின் ஆவிகள் பேசுவதை கேட்டதாகப் பலர் பதிவு செத்துள்ளனர். மேலும் இரவில் இந்த கடற்கரைக்கு வந்த சிலர் மர்மமான முறையில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
6. ஜடிங்கா, அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஜடிங்கா என்றழைக்கப்படுகின்ற இந்தக் குக்கிராமம் அமைத்துள்ளது. இந்த கிராமத்தில் இப்பொழுது தோராயமாக 2500 பேர் வசிக்கின்றனர். உலகில் வேறு எங்கும் கேள்விப்படாத வினோதமான நிகழ்வாக இங்கு நடக்கும் விசித்திரமான நிகழ்வைக் கூறலாம். தொலை தூர நாடுகளில் இருந்து புலம் பெயரும் பறவைகள், இந்தக் கிராமத்தில் உள்ள சில இடங்களுக்கு வரும் பொழுது பறப்பதை நிறுத்தி அப்படியே வேகமாக தரையில் மோதி இறக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கில் பறவைகள் இந்த இடத்தில தற்கொலை செய்து கொள்கின்றன. மேலும் இத்தகைய நிகழ்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வரும் அம்மாவாசை தினங்களில் மட்டும் நடைபெறுகிறது. பல நுற்றாண்டுகளாகத் தொடரும் இந்தப் பறவைகளின் தற்கொலைக்கான காரணம் இன்றுவரையில் அறியப்படவில்லை.
7. லம்பி தேஹார் சுரங்கம், முசோரி, உத்ரகாண்ட்

லம்பி தேஹார் சுரங்கம், உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பழைய மூடப்பட்ட சுரங்கமாகும். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான சுரக்கத் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் சுண்ணாம்பு வெட்டி எடுத்துள்ளனர். சுரக்கத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு முறைகள் நவீனமயமக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் பல சுரக்கத் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளனர். இறந்த அந்த சுரக்கத் தொழிலாளர்களின் ஆன்மாக்கள் இரவில் இந்த சுரகத்தினுள் உலவுவதாக நம்பப்படுகிறது. மேலும் சுரங்கத்தின் பல இடங்கள் அழமானதாகவும் சூரிய வெளிச்சம் உட்புக முடியாததாகவும் உள்ளது. இத்தகைய இடங்களில் வித்தியாசமான ஒலிகளை இங்கு வந்தவர்கள் கேட்டுள்ளனர். கத்துவது போலவும் கதறுவது போலவும் குரல்களை பலர் கேட்டுள்ளனர்.
8. அக்ரசேன் படிக்கிணறு, புதுதில்லி

இந்தியாவின் தேசியத் தலைநகரான புதுதில்லியின், கன்னாட்டு பிளேசு பகுதியின் அய்லி வீதியில் 60 மீட்டர் ஆழமும், 15 மீட்டர் அகலமும், 108 படிகளுடன் கூடிய அக்ரசேன் படிக்கிணறு உள்ளது. அக்ரசேன் படிக்கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இப்படிக்கிணற்றை மன்னர் அக்ரசேன் நிறுவினார் என நம்பப்படுகிறது. கிபி 14ம் நூற்றாண்டில் இப்படிக்கிணற்றை அகர்வால் ஜெயின் சமூகத்தினர் சீரமைத்தனர்.
இங்கு வாழும் மக்கள் இந்தப் படிக்கிணற்றின் இருண்ட பகுதிகளில் பேய்கள் குடியிருப்படதாக நம்புகிறார்கள். மேலும் இங்கு சுற்றுலா சென்று வந்த பார்வையாளர் பலரும் யாரோ தொடருவது போன்று உணர்ந்துள்ளனர்.
9. இராமோஜி திரைப்பட நகரம்

இந்தியாவில் உள்ள பல திரைப்பட நகரங்களில் புகழ்பெற்ற ஒன்று இராமோஜி திரைப்பட நகரம். இந்த இடமானது சுல்தான்களின் ஆட்சி காலத்தில் இறந்த போர் வீரர்களின் உடலைப் புதைக்கும் இடமாக இருந்தது. சுல்தான்களின் காலத்தில் மாயாணமாக விளங்கிய இந்த இடத்தில தற்போது திரைப்பட படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இங்கு நடக்கும் பல விஷங்கள் நம்பமுடியாததாக உள்ளது. திடீரென விளக்குகள் அணைவதும், கண்ணாடிகள் உடைவதும், படப்பிடிப்பு உபகரணங்கள் திடீரென பழுதுபடுவதும், மேலும் இது போன்ற பல நிகழ்வுகள் இங்கு காரணம் ஏதுமின்றி வழக்கமாக தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது மட்டும் அல்லாது பெண்களின் உடைகள் கிழிபடுவதும் பெண்கள் அறையினுள் தாளிடப்படுவதும் பல முறை நிகழ்ந்துள்ளது. மேலும் துணை நடிகர்கள் பலரும் சிறு சிறு விபத்துகளில் சிக்கியுள்ளனர்.
10. மூன்று மன்னர்கள் சர்ச், கோவா

கோவாவில் அமைத்துள்ள இந்த சர்ச்சில் இங்கு இரண்டு மூன்று மன்னர்களின் ஆவிகள் உலா வருவதாக நம்பப்படுகிறது. இதனால்தான் இந்த சர்ச் மூன்று மன்னர்கள் சர்ச் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இங்கு கூறப்படும் உள்ளூர் கதையின் படி, நடவு பிடிக்கும் ஆசையில் ஒரு மன்னர் வேறு இரண்டு மன்னர்களை இங்கு கொன்றதாகவும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியினால் அந்த மன்னரும் இந்த இடத்தில விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இறந்த இந்த மூன்று மன்னர்களின் ஆவிகள் இங்க உலா வருவதாக கூறப்படுகிறது. இந்து வாழும் மக்கள் பலரும் சுற்றுலாவிற்கு வந்த பலரும் இந்த மன்னர்களின் அவிகளைக் கண்டதாகப் பதிவு செய்துள்ளனர்.
Comments