பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில் | Bhoomipalar Temple

அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில்

மூலவர்:பூமிபாலகர்
உற்சவர்:காய்சினவேந்தன்
அம்மன்/தாயார்:மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி
தீர்த்தம்:வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்
புராண பெயர்:திருப்புளிங்குடி
ஊர்:திருப்புளியங்குடி
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

நம்மாழ்வார்

கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர்செய் கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலிவயல் திருப்புளிங்குடியாய் வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே.

-நம்மாழ்வார்

திருவிழா:

‌வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621 தூத்துக்குடி மாவட்டம்

போன்:

+91 4630 256 476

பொது தகவல்:

இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்துசயனத்தில் உள்ளார்) அருள்பாலிக்கிறார்

பிரார்த்தனை

அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்

தலபெருமை:

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலவில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தல வரலாறு:

இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாம‌ரைக்‌கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய ‌‌வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகிய‌யோருக்கு காட்சி கொடுத்ததலம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.