தேவாதிராஜன் திருக்கோயில் | Devadhirajan Temple

அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில்

மூலவர்:தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில்
உற்சவர்:ஆமருவியப்பன்
அம்மன்/தாயார்:செங்கமலவல்லி
தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி
புராண பெயர்:திருவழுந்தூர்
ஊர்:தேரழுந்தூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

செம்பொன்மதிள் சூழ்தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் கொம்பிலார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் அம்பராவும் கண்மடவார் ஐம்பலாணையும் அழுந்தூரே.

-திருமங்கையாழ்வார்.

திருவிழா:

வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23 வது திவ்ய தேசம்.மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்-609 808, மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்

போன்:

+91- 4364-237 952.

பொது தகவல்:

மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

பிரார்த்தனை

ஆணவத்தை அடக்கும் பெருமாள், கால் நடை தொழில் செய்பவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.

தலப்பெயர் விளக்கம்: உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “தேரெழுந்தூர்’ ஆனது.

கருட விமானம்: ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “”108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு” என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்க விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

தல வரலாறு:

ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் “ஆ’மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சிசெய்கிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.

About the author

Leave a Reply

Your email address will not be published.