மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில் | Makaranetunkuzhaikkaadar Temple

அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில்

மூலவர்:மகரநெடுங் கு‌ழைக்காதர்
உற்சவர்:நிகரில் முகில் வண்ணன்
அம்மன்/தாயார்:குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம்:சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
புராண பெயர்:திருப்பேரை
ஊர்:தென்திருப்பேரை
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

நம்மாழ்வார்

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லை என் தோழிமீர்காள் சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரையில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே.

-நம்மாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 88 வது திவ்ய தேசம்.நவ திருப்பதியகளில் இது 6 வது திருப்பதி (தென்திருப்பேரை). நவகிரகங்களில் இது சுக்ரன் தலம்.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623 தூத்துக்குடி மாவட்டம்

போன்:

+91 4639 272 233

பொது தகவல்:

இத்தலத்தில் மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

பிரார்த்தனை

அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்

தலபெருமை:

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலை வில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி.

தல வரலாறு:

இங்குள்ள ஆலயம் மிகப்பெரியதாகும். பூதேவி துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டுபெரிய குண்டலங்களைப் பெற்றாள். ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள். பங்குனி பவுர்ணமியில் தாமிரபரணியில் பெற்ற மீன்வடிவமுள்ள இரண்டு குண்டலங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்க பகவான் மகரநெடுங்கு‌ழைக்காதன் என்ற நாமம் பெற்றார். பூமி‌தேவி ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால் இத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. வருணன் குருவை நிந்த‌ை செய்த பாவம் விலக பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்‌மை அடைந்ததாகவும் பகவானை பூஜித்து அது நீங்கி மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.