விநாயகர் சதுர்த்தி | vinayaka chaturthi

விநாயக சதுர்த்தி | Ganesha Chaturthi

விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாறு

இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்கினர்.

தமிழகத்தில்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம். மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் தான். 1893-ம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மக்கள் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிவருகின்றனர். புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சிலையை ஏன் 3 நாள் கழித்து ஆற்றில் கரைக்கிறோம்! உண்மை இரகசியம்?

முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த பிறகு அந்த சிலைகளை தண்ணீரில் கரைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அறிவியல் ரீதியாக, ஆன்மீகம் ரீதியாக என்னென்ன காரணங்கள் இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கை ரகசியம்

உலகத்தில் தோன்றிய எல்லாருக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை உணர்த்துகிறார். மண்ணோடு மண்ணாகி புழுவாகி மீண்டும் நெளிவோம். எதுவுமே நிரந்தரமில்லை. என்பதை உணர்த்துகிறார்.

எது நிரந்தரம்

களிமண்ணில் உருவாகிறார் பிள்ளையார். அதாவது பஞ்சபூதத்தில் ஒன்றான மண். அதைப் பிரதிஷ்டை செய்யும்போது அதில் உயிர்ப்பு உருவாகிறது. கல்லிலும் உறைகிறார் கடவுள். அவரது சக்தியை நினைத்து உருகி வணங்குகிறோம். பின்னர், கொண்டாட்டமாய், பக்திப்பரவசத்துடன் விநாயகரை வழியனுப்புகிறோம். நம்மை விட்டு சென்றிடும் என்று பிரியம் காலம் தெரிந்து பிறகு நம் கண் முன்னால் தெரியும் நம்பிக்கைக்கு அளவீடே கிடையாது.

நீரில் கரையும் போது

விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை.

அறிவியல் காரணம்

ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்ப்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும்.இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைந்திடும். இதனை சமாளிக்கவே கெட்டியாக தங்கிடும் களிமண்ணினால் செய்த பிள்ளையாரை 3ஆம் நாள் ஆற்றில் கரைத்தார்கள்.

ஏன் 3 நாள் கழித்து?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள் தான் சிலையை கரைப்பார்கள். இதற்கு காரணம், களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆரம்பத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனை அன்றைய தினமே கரைத்தால் ஈரமான களிமண் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிடும் என்பதால் தான் நன்றாக காயும் வரை காத்திருந்து மூன்றாம் நாள் கரைக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டார்கள்

About the author

Leave a Reply

Your email address will not be published.