உலகின் கொடிய விஷம் உள்ள முதல் 10 பாம்புகள் | Top 10 Most Venomous Snakes
கிலுகிலுப்பை விரியன் – Rattlesnake

கிலுகிலுப்பை விரியன், இந்தப் பாம்பு அமெரிக்காவிலிருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பாம்பு ஆகும். கிலுகிலுப்பை விரியன் அதன் வால் முடிவில் கிலுகிலுப்பை போன்ற ஒரு அமைப்பைப் பெற்றுள்ளதால் அவ்வாரு அழைக்கப்படுகிறது. உண்மையில் கிலுகிலுப்பை விரியன் பிட் வைப்பர் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். மேலும் கிலுகிலுப்பை விரியன் அவற்றின் உடல் நீளத்தில் 2/3 பங்கு தூரம் வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை. கிழக்கு டயமண்ட்பேக் வட அமெரிக்காவில் மிகவும் நச்சு இனமாகக் கருதப்படுகிறது. கிலுகிலுப்பை விரியனின் பெரும்பாலான இனங்கள் ஹீமோடாக்ஸிக் விஷத்தைக் கொண்டுள்ளன, இந்த விஷம் திசுக்களை அழிக்கின்றன, உறுப்புகளைச் சிதைக்கின்றன மற்றும் இரத்த உறைவுக்கு இடையூறு விளைவிக்கும். கிலுகிலுப்பை விரியன் கடித்தால் உடனடி சிகிச்சை கூட சிலநேரம் பலனளிக்காது. இதன் விஷம் கடிபட்ட உறுப்பு அல்லது மரணத்தை அடைய வழிவகுக்கும். சுவாசிப்பதில் சிரமம், பக்கவாதம், வீக்கம் மற்றும் இரத்தக்கசிவு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். இதனால், ஒரு கிலுகிலுப்பை விரியனின் கடி எப்போதும் மிகவும் ஆபத்தானது. சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை 4% உயிர் இழப்பை குறைத்துள்ளது.
டெத் அடெர் – Death Adder

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் Death Adder வகைப் பாம்புகள் காணப்படுகிறது. இந்த விஷ பாம்பு உண்மையில் மற்ற விஷப் பாம்புகளை வேட்டையாடி கொல்கிறது. பொதுவாக வைப்பர் இனப் பாம்புகளைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. Death Adder பாம்புகள் பொதுவாக 40 மி.கி. முதல் 100 மி.கி வரை விஷத்தை செலுத்துகிறது. இந்த விஷமானது மிகவும் நச்சுத்தன்மை கொண்ட நியூரோடாக்சின் ஆகும். இந்த விஷம் முடக்குவாதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக 6 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும். விஷத்தின் அறிகுறிகள் பொதுவாக கடிபட்ட 24 முதல் 48 மணி நேரத்திற்குள் உச்சம் பெறுகின்றன. பொதுவாக Death Adderன் விஷம் மிக மெதுவாக முன்னேறுவதால், Death Adderன் விஷத்திற்கு சிகிச்சையளிப்பது மிகவும் வெற்றிகரமாக உள்ளது. Death Adder தாக்குதல் மிகவும் வேகமான ஒன்றாகும். Death Adder அதன் நிலையிலிருந்து வெறும் 0.13 நொடிகளில் கடித்து விஷத்தை செலுத்துவிட்டு மீண்டும் அதன் நிலைக்கு திரும்பிவிடும் ஆற்றலுடையது.
கண்ணாடி விரியன் – Vipers

கண்ணாடி விரியன் உலகெங்கிலும் காணப்படுகின்றன. கண்ணாடி விரியன் பாம்புகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில், குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. கண்ணாடி விரியன் மிக வேகமாக தாக்கக் கூடியது. இந்த இனங்களில் பெரும்பாலானவை விஷத்தைக் கொண்டிருக்கின்றன, அவை கடித்த இடத்தில் வலியுடன் தொடங்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன, கண்ணாடி விரியன் கடித்த இடத்தில் உடனடியாக தீவிர வீக்கம் ஏற்படுகிறது. மேலும் இரத்தப்போக்கு என்பது ஒரு பொதுவான அறிகுறியாகும், குறிப்பாக ஈறுகளில் இருந்து இரத்தம் வெளியேறும்.
கடிபட்ட சிறிது நேரத்தில் இதய துடிப்பு குறைகிறது. கடிபட்ட இடத்தில் கொப்புளம் ஏற்படுகிறது,
கண்ணாடி விரியனின் விஷம் பொதுவாக மேலோட்டமானது மற்றும் கடிபட்ட இடத்தின் அருகிலுள்ள தசைகளுக்கு மட்டுமே செல்லும்.
பொதுவாக கடிபட்ட அனைவர்க்கும் கண்ணாடி விரியனனின் விஷம் வாந்தி மற்றும் முக வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கடுமையான வலி 2-4 வாரங்களுக்கு நீடிக்கும். பெரும்பாலும், வீக்கம் 48-72 மணி நேரத்திற்குள் உச்சம் அடைகிறது. மேலும் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா தசை திசுக்களில் கசிவதால் வீங்கிய பகுதி முழுவதும் நிறமாற்றம் ஏற்படலாம். சரியான சிகிச்சை அளிக்காமல் போனால் சுவாசம் அல்லது இருதய செயலிழப்பு ஆகியவற்றால் கடிபட்ட முதல் நாளிலிருந்து 14 நாட்களுக்குள் மரணம் நிகழ வாய்ப்புள்ளது.
பிலிப்பைன்ஸ் நல்ல பாம்பு – Philippine Cobra

நல்ல பாம்பின் பெரும்பாலான இனங்கள் கொடிய விஷமுடியவை. அவற்றில் பிலிப்பைன்ஸ் நல்ல பாம்பின் விஷம் மிகவும் கொடியது. பிலிப்பைன்ஸ் நல்ல பாம்பு அதன் விஷத்தை சரியாக இலக்கை நோக்கி 3 மீட்டர் தூரம் வரை துப்பக்கூடிய திறன் கொண்டவை. இதன் விஷம் என்பது ஒரு நியூரோடாக்சின் ஆகும். இது இதய மற்றும் சுவாச செயல்பாட்டை பாதிக்கிறது. பிலிப்பைன்ஸ் நல்ல பாம்பின் மிகக்கொடிய விஷமானது சுவாச முடக்கம் ஏற்படுத்தி முப்பது நிமிடங்களில் இறப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த விஷம் மற்ற விழபாம்புகளின் விஷம் போல் இல்லாமல் குறைந்தபட்ச திசு சேதத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. நியூரோடாக்சின்கள் தசைகளுக்கு அருகிலுள்ள நரம்பு-தசை சந்திப்புகளுடன் பிணைப்பதன் மூலம் நரம்பு சமிக்ஞைகளை கடத்துவதற்கு இடையூறு செய்கின்றன. விஷத்தின் அறிகுறிகளில் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், சரிவு மற்றும் வலிப்பு ஆகியவை இருக்கலாம்.
டைகர் பாம்பு – Tiger Snake

Tiger Snake பாம்புகள் ஆஸ்திரேலியாவில் காணப்படும் விஷமுள்ள பாம்புகளில் மிகவும் சக்திவாய்ந்த நியூரோடாக்ஸிக் விஷம் கொண்டது ஆகும். இந்த பாம்பு கடித்தால் மரணம் 30 நிமிடங்களுக்குள் ஏற்படலாம். ஆனால் மரணம் ஏற்பட பொதுவாக 6-24 மணி நேரம் ஆகும். பாம்புக்கடி மருந்துகளின் வளர்ச்சிக்கு முன்பு, Tiger Snake பாம்புகளின் கடியின் இறப்பு விகிதம் 60-70% ஆக இருந்தது. இந்த பாம்பின் விஷத்தின் அறிகுறிகளில் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி, கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் அதிக வியர்வை ஆகியவை அடங்கும், அதன்பிறகு சுவாசக் கஷ்டங்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன. பொதுவாக Tiger Snake கடிக்காமல் தப்பி ஓடும். ஆனால் தப்பியோட முடியாத பொது Tiger Snake மிகத்துல்லியமாக தாக்கும்.
பிளாக் மாம்பா – Black Mamba

இந்த Black Mamba வகை பாம்புகள் ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை அனைத்தும் மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் கொடிய விஷம்கொண்டவை. மிகத் துல்லியத்துடன் இவை தாக்கும். மேலும் Black Mamba உலகின் அதிவேக நிலப் பாம்பாகும். Black Mamba மணிக்கு 20 கிமீ / மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டவை. இந்த பாம்புகள் தொடர்ச்சியாக 12 முறை வரை தாக்கும்.
Black Mamba பாம்பின் ஒரு கடியானது 10 முதல் 25 வளர்ந்த மனிதர்களைக் கொல்லக் கூடிய திறன் கொண்டது. இதன் விஷம் வேகமாக செயல்படும் நியூரோடாக்சின் ஆகும். இதன் கடி சராசரியாக 100-120 மி.கி விஷத்தை வழங்குகிறது. இருப்பினும், இது 400 மி.கி வரை வழங்க முடியும். ஒரு வளர்த்த மனிதனைக் கொல்ல 0.25 மி.கி. அளவு விஷம் போதுமானது.
விஷத்தின் ஆரம்ப அறிகுறியாக கடித்த பகுதியில் வலி ஏற்படும். பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு வாய் மற்றும் முனைகளில் கூச்ச உணர்வு,பார்வை மங்குதல்,கடுமையான குழப்பம், காய்ச்சல், அதிகப்படியான உமிழ்நீர் (வாய் மற்றும் மூக்கின் நுரைத்தல் உட்பட) சுரத்தல் ஆகியவை ஏற்படும். மேலும் பேசும் திறன் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு உடனடி மருத்துவ கவனிப்பு கிடைக்கவில்லை என்றால், அறிகுறிகள் கடுமையான மாறும். வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, வலி, அதிர்ச்சி, சுவாசத் தடை மற்றும் பக்கவாதம் போன்றவை விரைவாக ஏற்படும் . இறுதியில், பாதிக்கப்பட்டவர் மன உளைச்சல், சுவாசக் கோளாறு, கோமா மற்றும் பின்னர் மரணம் ஆகியவற்றை அனுபவிக்கிறார். மருந்து இல்லாத காலகட்டத்தில், Black Mamba கடியின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100% ஆகும், இது அனைத்து விஷ பாம்புகளிலும் மிக உயர்ந்தது. கடியின் தன்மையைப் பொறுத்து, எந்த நேரத்திலும் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படலாம்.
தைபன் – Taipan

Taipan வகை பாம்புகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மற்றும் ஒரு மிகக்கொடிய விஷம் கொண்ட பாம்பு ஆகும். இதன் விஷம் 12,000 கினிப் பன்றிகளைக் கொல்லும் அளவுக்கு வலுவானது. விஷம் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை உறிஞ்சி, தமனிகள் அல்லது நரம்புகளைத் தடுக்கிறது. இது மிகவும் கொடிய நியூரோடாக்சிக் ஆகும். இதன் விஷத்திற்கு மருந்து வருவதற்கு முன்னர் Taipan கடித்தால் தப்பிப்பிழைத்தவர்கள் யாரும் இல்லை, மரணம் பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் நிகழ்கிறது. சரியான நேரத்தில் மருத்து அளிக்கப்பட்டாலும் கூட பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்க நேருகிறது.
ப்ளூ க்ரெய்ட்- Blue Krait

Malayan அல்லது Blue Krait தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசியா முழுவதும் காணப்படுகிறது. சரியான நேரத்தில், முறையில் மருந்து அளித்தாலும் கூட உயிர் பிழைப்பது மிகக் கடினம். பொதுவில் Blue Krait பாம்பினால் கடிபட்டவர்களில் 50 சதவிகிதம் மக்கள் மரணம் அடைகின்றனர்.Blue Krait ஒரு இரவு நேரப் பாம்பு இனமாகும். Blue Krait இரவில் இரைதேடும். Blue Krait மற்ற பாம்புகளை வேட்டையாடி கொல்கிறது.Blue Kraitன் விஷம் ஒரு நியூரோடாக்சின் ஆகும், இது நல்ல பாம்பின் விஷத்தை விட 16 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. Blue Kraitன் இரவு நேர இயல்பு காரணமாக மனிதர்கள் கடிபடுவது அரிது. மருந்துகளின் வளர்ச்சிக்கு முன்பு, இறப்பு விகிதம் 85% ஆகும். மருந்து சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டாலும் கூட உயிர் பிழைப்பது நிச்சயமற்ற ஒன்று. Blue Krait கடித்த 6-12 மணி நேரத்திற்குள் மரணம் பொதுவாக நிகழ்கிறது. நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்றாலும் பல நேரங்களில் கோமா ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.
கிழக்கு பழுப்பு பாம்பு – Eastern Brown Snake

ஒரு வளர்ந்த மனிதனைக் கொல்ல இந்த பாம்பின் ஒரு அவுன்ஸ் விஷத்தின் 1 / 14,000 போதுமானது. பலவகையான உயிரினங்களில் வரும் Eastern Brown Snake மிகவும் விஷம் கொண்டது . துரதிர்ஷ்டவசமாக, அதன் விருப்பமான வாழ்விடமும் ஆஸ்திரேலியாவின் மக்கள் வாழும் இடங்களாக உள்ளது. Eastern Brown Snake வேகமாக நகரும். மிகவும் ஆக்ரோஷம் கொண்ட இந்தப் பாம்பு, சில சூழ்நிலைகளில் துரத்திச் சென்று தொடர்ந்து பலமுறை கடிக்கும். Eastern Brown Snake பாம்புக் குடிகளின் விஷம் கூட ஒரு வளர்ந்த மனிதனைக் கொல்ல போதுமானது. Eastern Brown Snake விஷத்தில் நியூரோடாக்சின்கள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக Eastern Brown Snake பாம்புகள் கடிக்கும் அத்தனை முறையும் விஷத்தை செலுத்துவதில்லை. மனிதர்களில் இதனால் கடிபட்டவர்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே இது விஷத்தை செலுத்தியுள்ளது.
உள்நாட்டு தைபன் – Inland Taipan

இது உலகின் உள்ள நில பாம்புகளில் மிகவும் விஷத்தைக் கொண்டுள்ளது.ஒரு கடிக்கு அதிகபட்சம் 110 மி.கி வரையில் இது விஷத்தை செலுத்துகிறது. இந்த அளவு விஷமானது வளர்த்த 100 மனிதர்களைக் கொல்லப் போதுமானது. இத விஷமானது நல்ல பாம்பை விட 50 மடங்கு அதிகம். அதிர்ஷ்டவசமாக, உள்நாட்டு தைபன் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இந்த வகைப் பாம்புகள் மனிதர்களை தாக்குவதில்லை. இதன் விஷம் 45 நிமிடங்களுக்குள் ஒரு வயதுவந்த மனிதனைக் கொல்லக்கூடும் என்றாலும், இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை.
Belcher’s Sea Snake

இது உலகில் அறியப்பட்ட பாம்புகளில் மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஆகும். இதன் விஷத்தில் ஒரு சில மில்லிகிராம் 1000 பேரைக் கொல்லும் அளவுக்கு வலிமையானது. இதன் 1/4 க்கும் குறைவான கடிகளில் மட்டுமே விஷம் இருக்கும். பொதுவாக மீனவர்கள் இந்த பாம்பிற்கு பலியாகிறார்கள். மீனவர்கள் கடலில் இருந்து வலைகளை இழுக்கும்போது இந்தப் பாம்புகளை எதிர்கொள்ள நேர்ருகிறது தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் கடல் முழுவதும் இவ்வகைப் பாம்புகள் காணப்படுகிறது.