தனுஷ் | Dhanush

தனுஷ் (28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

இவர் 40 மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 3 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

திரைப்பட வாழ்க்கை

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். அதை தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம் (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

சிறந்த நடிகர்

2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 3 என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹாசன் என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

இந்தித் திரைப்படம்

2013 ஆம் ஆண்டு ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாக நல்லவரவேட்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் கே. வி. ஆனந்த் இயக்கிய அனேகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததற்காக 100 கோடி கிளப்பில் நுழைந்தது.

இசை

இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.

பாடல்கள்

ஆண்டுதலைப்புதிரைப்படம்
2004நாட்டு சரக்குபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2005துண்டை காணோம் தேவதையைக் கண்டேன்
2006எங்க ஏரியாபுதுப்பேட்டை
2010உன் மேலஆயிரத்தில் ஒருவன்
2011ஓட ஓட 
 காதல் என் காதல்மயக்கம் என்ன
2011வொய் திஸ் கொலவெறி டி  
 கண்ணழகா3
2013டெட்டி பீர் நய்யாண்டி
2014அம்மா அம்மா  
 போ இன்று நீயாக  
 வார்ட் எ கறவாட்வேலையில்லா பட்டதாரி
2015டங்காமாரி அனேகன்
2015நோ ப்ரோப்ளம்வஜ்ரகாய
2015நெஞ்சமெல்லாம் எதிர்நீச்சல்
2015பழங்காலஇரண்டாம் உலகம்
2015ஓ ஓ  
 ஜோடி நிலவுதங்க மகன்
2015மாரி தாரா லோக்கல்  
 டோனு டோனு டோனு  
 பகுலு ஒடயும் டகுலு மாரிமாரி
2016மாலை வரும் வண்ணில்லாநெஞ்சம் மறப்பதில்லை
2016கொடிகொடி
2016திக்காதிக்கா
2017சொல்லி தொலையேன் மாயாக்கை
2017சூரகத்து 
 வென்பனிமலரேப. பாண்டி
2017புதுவாய்யாதுமாகி நின்றன்
 (இசை காணொளி)அஸ்வின் விநாயகமூர்த்தி
2017ரகுவரனின் வாழ்க்கை  
 ரகுவரனின் சித்திரவதைவேலையில்லா பட்டதாரி 2
2018கோயிந்தம்மாவலவட சென்னை
2018இங்கிலீஷ் லவ்ஸ்பக்கரி
2018லோக்கல் சரக்காபடை வீரன்
2018ஏழவாஎழுமின்
2018மாரி கெத்து  
 ரவுடி பேபிமாரி 2
2019நெஞ்சோடு விநாயபிரதர்’ஸ் டே
2019பொல்லாத பூமி  
 கண்ணழகு ரத்தினமேஅசுரன்
2020சில் ப்ரோபட்டாஸ்
2020கதோடு காதானென்ஜெயில்

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்
2002துள்ளுவதோ இளமை
2003காதல் கொண்டேன்
 திருடா திருடி
2004புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
 சுள்ளான்
 ட்ரீம்ஸ்
2005தேவதையைக் கண்டேன்
 அது ஒரு கனாக்காலம்
2006புதுப்பேட்டை
 திருவிளையாடல் ஆரம்பம்
2007பரட்டை என்கிற அழகுசுந்தரம்
 பொல்லாதவன்
2008யாரடி நீ மோகினி
 குசேலன்
2009படிக்காதவன்
2010குட்டி
 உத்தம புத்திரன்
2011ஆடுகளம்
 சீடன்
 மாப்பிள்ளை
 வேங்கை
 மயக்கம் என்ன
20123
2013ப்ரோபிரியேட்டர்ஸ்: கம்மத் & கம்மத்
 எதிர்நீச்சல்
 ராஞ்சனா
 மரியான்
 நய்யாண்டி
2014வேலையில்லா பட்டதாரி
2015ஷமிதாப்
 அனேகன்
 வை ராஜா வை
 மாரி
 தங்க மகன்
2016தொடரி
 கொடி
2017ப. பாண்டி
 வேலையில்லா பட்டதாரி 2
2018பக்கீரின்
 வட சென்னை
 மாரி 2
2019அசுரன்
 எனை நோக்கி பாயும் தோட்டா
2020பட்டாஸ்
 ஜகமே தந்திரம்
 கர்ணன்
2021அட்ரங்கி ரீ

தயாரிப்பாளராக

வருடம்திரைப்படம்
20123
2013எதிர்நீச்சல்
2014வேலையில்லா பட்டதாரி
2015ஷமிதாப்
 காக்கி சட்டை
 காக்கா முட்டை
 மாரி
 நானும் ரவுடி தான்
 தங்க மகன்
2016காக்கி சட்டை
2014வேலையில்லா பட்டதாரி
2016விசாரனை
 அம்மா கணக்கு
2017சினிமா வீரன்
 ப. பாண்டி
 வேலையில்லா பட்டதாரி 2
 விஐபி 2
 தரங்கம்
 காலா
2018வட சென்னை
 மாரி 2

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *