தீபாவளி | Diwali

தீபாவளி, தீப ஒளித்திருநாள்,Deepavali, Diwali

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

தோற்ற மரபு

இந்து சமயத்தில் தீபாவளி

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான்.

அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான். பின்பு மனிதன் ஆக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்று பெயர் ஏற்பட்டது (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும். இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.

அப்போது கிருஷ்ணர் அவதாரத்திற்க்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது மனைவியில் ஒருவரான ச‌‌த்‌தியபாமா‌ (பூமாதேவியின்) அவதாரமாவார். அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினான். அதில் அழகிய மாறுவேடத்தில் கிருஷ்ணர்-சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஒரு அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றான். இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஒரு அம்பை, கிருஷ்ணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கி கொள்கிறாள்.

அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியயை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தான் கிருஷ்ணர் என்றும் கிருஷ்ணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான் என்று கூறப்படுகின்றது. இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம், அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில் இராமர்- இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

கந்த புராணம்

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்தார்.

கி.பி.16ஆம் நூற்றாணடு முதல் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன.

நரகாசுரன்

இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது .நரகாசுரன் என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது வருத்தப்படக்கூடாது என்னுடைய இருப்பை அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும் 16 வகை பலகாரம் படைத்து கொண்டாடவேண்டும் என்று கூறியுள்ளார் நரகாசுரன்.

பிறப்பு

மேலும் நரகாசுரன் ஒரு புராணகால காமரூப அரசர்களில் மூன்று வம்சங்களின் புகழ்பெற்ற முன்னோடியான அசுரர்களான நரகா, அவரது மகன் பகதத்தா மற்றும் பிந்தையவரின் மகன் வஜ்ரதத்தா ஆகியோரின் வழித்தோன்றியவனாகும். அவர் பாமா வம்சத்தின் காமரூப பேரரசு நிறுவிய ஆட்சியாளராக கருதப்படுகிறார் . பின்னர் புனையப்பட்ட புனைவுகளின்படி அவன் பூமாதேவிக்கு அல்லது காமரூப பேரரசை நிறுவிய இரணியாட்சன் என்பவனின் மகனாவான் என்றும் கூறப்படுகிறது. அவரது வராஹா அவதாரத்தில் விஷ்ணுவால் பிறந்தாரெனக் கூறப்படுகிறது. இரணியாட்சன் வெவ்வேறு நூல்களின்படி. அவர் காமரூப பேரரசு நிறுவியவர் எனக் கூறப்படுகிறார். அவர் மகாபாரதப் புகழ் கிருஷ்ணரால் கொல்லப்பட்டார். அவரது மகன் பகதத்தன் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தார்.

புராணங்கள்

பக்தியுள்ள நரகாசுரன் தீயவனாக மாறினான். அசுரர் (இந்து சமயம்) பக்கம் இருந்ததால் பானாசூரன் என்றும் அசுரன் என்றும் அவன்து பெயருக்குப் பின்னர் சேர்க்கப்பட்டு அழைக்கப்பட்டான்.

காளிகா புராணம்

பத்தாம் நூற்றாண்டின் காளிகா புரணத்தில் அவன் மிதிலாவிலிருந்து வந்ததாகவும், பிராக்ஜோதிச நாட்டை நிறுவியதாகவும், பின்னர், தனவா வம்சத்தின் அரசன் கிராதர்கள் கட்டகாசுரனை கடைசியாக வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. விஷ்ணு. பிற்கால அவதாரத்தால் அவர் அழிக்கப்படுவார் என்று முன்னறிவிக்கப்பட்டது. அவரது தாயார், பூமி, தனது மகனுக்கு நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் என்றும், அவன் அனைவரையும்விட சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் வரம் கோரினார். விஷ்ணு இந்த வரங்களை வழங்கினார்.

நரக புராணக்கதை வரலாற்றில் அசாம் ஒரு முக்கியமானது. குறிப்பாக காமரூபா பகுதியில் வரலாற்று காலங்களில் ஆட்சி செய்த மூன்று வம்சங்களின் முன்னோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. குவகாத்திக்கு அருகிலுள்ள ஒரு மலைக்கு நரகாசுரன் பெயரிடப்பட்டது. அவன் இந்து சமய நம்பிக்கையுடனும் தொடர்புடையவர் என்பதும், இந்துக்களின் வழிபாட்டுத் தளமான காமக்கியாவில் உள்ள சக்தி தெய்வத்தை வணங்கியதாகவும் கூறப்படுகிறது.

புராணத்தின் வரலாறு

நரகாசுரனும் அவனது இராச்சியமான பிரக்ஜோதிஷாவும், மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய இரண்டிலும் காணப்படுகிறது. மேலும், முதல் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்படாத பிரிவுகளிலும் எழுதப்பட்டுள்ளது. அங்கு அவர் விஷ்ணுவின் வராஹா அவதாரத்தில் பூதேவியின் மூலம் பிறந்த மகன் (பூமி) என்று சித்தரிக்கப்படவில்லை. இவனுடைய மகன் பகதத்தன் மகாபாரதப் போரில் கௌரவர்களுக்காக போராடியதாக கூறப்பட்டுள்ளது.

இவன் பன்றி என்ற போன்றவன் பிரஜாபதி குறிப்பை சதபத பிராமணத்தில் காணலாம். மற்றும் பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதைத்ரிய அரண்யகா என்பதில் பின்னர் விஷ்ணுவின் அவதாரங்களுடன் பின்னர் தொடர்புபடுத்தப்பட்டன, இது குப்தர் காலத்தில் பிரபலமானது (பொ.ச. 320-550) மற்றும் பூமியுடனான தொடர்பு ஒரு மகனை உருவாக்கியது என்பது முதன்முதலில் அரி வம்சத்தின்இன் இரண்டாம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகவதம் (புராணம்) (8th-10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) இது கதையை மேலும் விரிவுபடுத்துகிறது. நரக புராணம் உபபுராணமான காளிகா புராணத்தில் மிக விரிவான விரிவாக்கத்தைப் பெறுகிறது (10ஆம் நூற்றாண்டு), இது அசாமில் இயற்றப்பட்டது. இங்கே சீதையின் தந்தையான விதேஹ நாட்டு மன்னன் ஜனகனின்ன் புராணம் கூரப்பட்டு நரகாசுரன் புராணத்தில் சேர்க்கப்படுகிறது.

மற்ற புராணங்களின்படி, நரகாசுரன் விஷ்ணுவின் மகன் அல்ல, ஆனால் இரணியாட்சன், அசுரன் ஆவான் நரகாசுரனின் மரணத்திற்கு முன், அவரது மரணத்தை அனைவரும் வண்ணமயமான ஒளியுடன் கொண்டாட வேண்டும் என்று அவன் சத்தியபாமாவிடம் ஒரு வரம் கோரினார். இதனால் தீபாவளிக்கு முந்தைய நாள் “நரக சதுர்தசி” என்று கொண்டாடப்படுகிறது

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

பிற நாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு.மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.

About the author

Leave a Reply

Your email address will not be published.