நடிகை ரம்யா கிருஷ்ணன் | Actress Ramya Krishnan

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரைப் பயணம்

ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இடைவெளி

தமிழ் சினிமாவில் இருந்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, 1999 ஆம் ஆண்டில், ரஜினிகாந்த் உடன் இணைந்து படயப்பா என்ற தமிழ் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ‘நீலாம்பரி’ என்கிற பாத்திரத்தில் நடித்தார்.

படத்தில் அவரது நடிப்பு மிகவும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு உட்பட பல விருதுகளை அவர் பெற்றார்.

பின்னர் அவர் வணிக ரீதியாக வெற்றிகரமான பாட்டாளி, பட்ஜெட் பத்மநாபன் மற்றும் பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்தார். பஞ்சதந்திரத்தில் “மேகி” என்ற பாத்திரத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.

மேலும் ரம்யா கிருஷ்ணன் அம்மோரு, ராஜகாளி அம்மன் மற்றும் அன்னாய் காளிகாம்பாள் உள்ளிட்ட பல படங்களில் ஒரு தேவி வேடத்தில் நடித்தார்.

நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்

1983வெள்ளை மனசு
1985படிக்காதவன்
1986முதல் வசந்தம்
1986சர்வம் சக்திமயம்
1987பேர் சொல்லும் பிள்ளை
1988குங்குமக் கோடு
1988காதல் ஓய்வதில்லை
1988தம்பி தங்க கம்பி
1989மீனாட்சி திருவிளையாடல்
1991கேப்டன் பிரபாகரன்
1991வா அருகில் வா
1991சிகரம்
1992தம்பி பொண்டாட்டி
1992வானமே எல்லை
1993பொன் விலங்கு
1995ராஜா எங்க ராஜா
1995அம்மன்
1999படையப்பா
1999பாட்டாளி
2000பட்ஜெட் பத்மநாபன்
2000ரிதம்
2000திருநெல்வேலி
2001ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
2001ராஜ காளி அம்மன்
2001நாகேஸ்வரி
2001அசத்தல்
2001வாஞ்சிநாதன்
2001நரசிம்மா
2002பஞ்ச தந்திரம்
2002பாபா
2002ஆயிரம் பொய் சொல்லி
2002ஜுலி கணபதி
2002ஜெயா
2003அன்னை காளிகாம்பாள்
2003பாறை
2003குறும்பு
2003காக்கா காக்க
2004குத்து
2007குற்றப்பத்திரிகை
2008ஆறுமுகம்
2010குட்டிப் பிசாசு
2011கனவு மெய்பட வேண்டும்
2013சந்திரா
2015பாகுபலி 1
2017பாகுபலி 2
2018தானா சேர்ந்த கூட்டம்
2019சூப்பர் டீலக்ஸ்
2020வந்தா ராஜாவா தான் வருவேன்
2020தேவ்
2020உயர்ந்த மனிதன்

குடும்பம்

கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

வெளி இணைப்புகள்

நடிகை ரம்யா கிருஷ்ணன் – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *