நடிகர் ஆர்யா | Actor Arya

ஆர்யா (பிறப்பு: டிசம்பர் 11, 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு பாலக்காடு , கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா,ரஜி என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

நடிகை சாயிசா என்பவர் திருமணம் செய்து கொண்டார்.பிறந்த ஊர் திரிகரிபுர், காரசகோடு. கேரளா. பெற்றோர் பெயர் உமர் செதிராகாந்த்-ஜாமிலா செதிரா காந்த்.

திரைப்பட வாழ்க்கை

2005-2010

இவர் 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிறு பிரச்சனை காரணமாக 2005ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படம் வருவதற்கு முன்பு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் விருது புதுமுக நடிகருக்கான விருதை வென்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பட்டியல் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் பரத் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பத்மப்பிரியா நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. நல்ல வசூலும் செய்தது.

2007ஆம் ஆண்டு ஓரம் போ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா நடித்துள்ளார். சேரன் இயக்கி நடித்த மாயக் கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு சர்வம் மற்றும் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ருத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக அஜித் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் காசி மற்றும் தமிழ்நாட்டில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்துள்ளார்.

இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைபப்டத்தில் இவருடன் சேர்ந்து பூஜாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல பிரிவுகளின் கில் தமிழக அரசு திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.

சர்வம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் 2010ஆம் ஆண்டு வருடு, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு போன்ற திரைப்படங்களிலும் வருடு என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த திரைபப்டத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இவருக்கு ஜோடியாக ஏமி ஜாக்ஸன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி திரைபப்டத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சிக்கு புக்கு என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிரேயா சரன் நடித்துள்ளார். இவர் காதல் சொல்ல வந்தேன் மற்றும் வ என்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2011-2014

இவர் 2011ஆம் ஆண்டு உருமி, அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு வேட்டை, சேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆரம்பம் திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து அஜித் குமார், நயன்தாரா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்பொழுது இவர் மீகாமன், புறம்போக்கு, யட்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். இந்த திரைப்படங்கள் 2014ஆம் ஆண்டு அல்லது 2015ஆம் ஆண்டு வெளியாகும்.

நடித்த திரைப்படங்கள்

2005அறிந்தும் அறியாமலும்
 ஒரு கல்லூரியின் கதை
 உள்ளம் கேட்குமே
2006கலாபக் காதலன்
 பட்டியல்
 வட்டாரம்
2007மாயக்கண்ணாடி
 ஓரம் போ
2009நான் கடவுள்
 சிவா மனசுல சக்தி
 சர்வம்
2010வருடு
 மதராசபட்டினம்
 காதல் சொல்ல வந்தேன்
 பாஸ் என்கிற பாஸ்கரன்
 சிக்கு புக்கு
2011அவன் இவன்
2012வேட்டை
 ஒரு கல் ஒரு கண்ணாடி
 சேட்டை
2013ராஜா ராணி
 இரண்டாம் உலகம்
 ஆரம்பம்
2014‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்
 ஜீவா
 மீகாமன்
2015புறம்போக்கு
 யட்சன்
 டபுள் பர்றேல்
 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

வெளி இணைப்புகள்

நடிகர் ஆர்யா – விக்கிப்பீடியா

Actor Arya – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *