நடிகர் சரத்குமார் | Actor R. Sarathkumar

சரத்குமார்,(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.

தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.

இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்

வாழ்க்கை வரலாறு

தனிப்பட்ட வாழ்க்கை

எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர்.

கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார்.

மணவாழ்க்கை

சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.

அரசியல் வாழ்க்கை

1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.

31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சரத்குமார் ஆவார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்

  • புலன் விசாரணை
  • சேரன் பாண்டியன்
  • நட்புக்காக
  • சூரிய வம்சம்
  • நாட்டாமை
  • நேதாஜி
  • ரகசியப் போலீஸ்
  • கம்பீரம்
  • ஏய்
  • சாணக்யா
  • தலைமகன்
  • காஞ்சனா

கோடீஸ்வரன் என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்

ஆண்டுநிலைமைஇடம்
2011வெற்றிதென்காசி

விருதுகள்

• தமிழக அரசின் கலைமாமணி விருது (1993)

தமிழக அரசு விருதுகள்

• 1994 – தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருது – நாட்டாமை
• 1996 – எம்.ஜி.ஆர் விருது
• 1998 – தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருது – நட்புக்காக / சிம்மராசி

ஃபிலிம்ஃபேர் விருது

• 1994 – ஃபிலிம்ஃபேர் விருது- சிறந்த தமிழ் நடிகர் – நாட்டாமை
• 1998 – ஃபிலிம்ஃபேர் விருது- சிறந்த தமிழ் நடிகர் – நட்புக்காக

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

• 1990 – சிறந்த வில்லன் நடிகர் – புலன் விசாரணை
• 1992 – சிறந்த நடிகர் – சூரியன்
• 1994 – சிறந்த நடிகர் – நாட்டாமை
• 1997 – சிறந்த நடிகர் – சூரியவம்சம்
• 2000 – செவாலியே சிவாஜிகணேசன் விருது

மற்ற விருதுகள்

• 1997 – தினகரன் சினிமா –சிறந்த நடிகர் விருது – சூரியவம்சம்
• 1997 – சினிமா ரசிகர்கள் விருது – சிறந்த நடிகர் – சூரியவம்சம்
• 2005 – சிவாஜிகணேசன் விருது
• 2006 – எம்.ஜி.ஆர். – சிவாஜி விருது – தலைமகன்
• 2009 – ஆசியாநெட் நடுவர் தேர்வு விருது – பழசிராஜா
• 2009 – வனிதா மலையாள இதழ் – சிறந்த நடிகர் விருது – பழசிராஜா
• 2009 – சத்யன் நினைவு விருது – சிறந்த நடிகர் – பழசிராஜா
• 2009 – ஜெய்ஹிந்த் தேசபக்திப் பெருமை விருது – பழசிராஜா
• 2009 – மாத்ருபூமி அமிர்தா நடுவர் சிறப்பு விருது – பழசிராஜா
• 2011 – SIIMA சிறந்த சார்பு நடிகருக்கான விருது – காஞ்சனா – முனி2
• 2011 – விஜய் விருது – சிறந்த சார்பு நடிகர் – காஞ்சனா – முனி 2
• 2013 – ரெயின்போ நல்லெண்ணத் தூதுவர் விருது
• 2013 – நார்வே தமிழ்த் திரைப்பட விருது – தமிழ்த் திரையுலக அடையாளம்

வெளி இணைப்புகள்

நடிகர் சரத்குமார் – விக்கிப்பீடியா

Actor R. Sarathkumar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *