நடிகர் உதயநிதி ஸ்டாலின் | Actor Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

விசய், திரிசா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

அரசியல் பிரவேசம்

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுடாலின், மார்ச்சு மாதம் 2018 இல்

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; ஸ்டாலின் மகனாக, அவரின் அரசியல்வாரிசாக அரசியலுக்கு வரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாகவே இருக்க விரும்புகிறேன், எந்த ஒரு கட்சி பதவியும் தேவையில்லை.

பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. திமுக வின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஒரு ஆண்டாக முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்தச் செய்தி இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக 04.07.2019 அன்று காலை 11:00 மணி்க்கு மேல் தெரிவிக்கப்பட்டது.

முதலில் பதவிவேண்டாம் என மறுத்த உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி

உதயநிதி ஸ்டாலின் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

நடித்த திரைப்படங்கள்

2009ஆதவன்
2012ஒரு கல் ஒரு கண்ணாடி
2014இது கதிர்வேலன் காதல்
2015நண்பேன்டா
2016கெத்து
2016மனிதன்
2017சரவணன் இருக்க பயமேன்
2017பொதுவாக எம்மனசு தங்கம்
2017இப்படை வெல்லும்
2018நிமிர்
2019கண்ணே கலைமானே
2020சைக்கோ
2020கண்ணை நம்பாதே
2020ஏஞ்சல்
2008குருவி
2009ஆதவன்
2010மன்மதன் அம்பு
2011ஏழாம் அறிவு
2012ஒரு கல் ஒரு கண்ணாடி
2012நீர் பறவைகள்
2010விண்ணைத்தாண்டி வருவாயா
2010மதராசபட்டினம்
2010பாஸ் என்கிற பாஸ்கரன்
2010மைனா
2011கோ

வெளி இணைப்புகள்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் – விக்கிப்பீடியா

Actor Udhayanidhi Stalin – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *