நடிகர் சரவணன்| Actor Saravanan

சரவணன் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 முதல் 1998 வரை முன்னணி நடிகராக இருந்தார்.

குடும்பம் மற்றும் துவக்ககால வாழ்க்கை

சரவணன் சேலத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் சென்னை சென்று அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கல்வி பயின்றர். இவர் 1996 இல் சூரியசாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தொழில்

1990 களில் சரவணன் தொடர்ச்சியாக முன்னணி வேடங்களில் நடித்தார், ஆனால் தசாப்தத்தின் பிற்பகுதியில் இவரது திரைப்பட வாழ்க்கை நின்றுபோனது. இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் .

சிறிது காலத்திற்கு பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துத்து, விமர்சன ரீதியான பாராட்டையும் , தமிழில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் . இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் பெற்றார். பருதிவீரனின் வெற்றிக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சஞ்சய் ராமால் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான வீரமும் ஈரமும் படத்தில் நடிப்பது உள்ளிட்ட பல வாய்ப்புகளைப் பெற்றார்.

தொலைக்காட்சி


அண்மையில் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் 6 வது போட்டியாளராக நுழைந்தார்.

நடித்த திரைப்படங்கள்

1991 வைதேகி வந்தாச்சு
1992 பொண்டாட்டி ராஜ்ஜியம்
1992 அபிராமி
1993 மாமியார் வீடு
1993 சூரியன் சந்திரன்
1993 பெற்றெடுத்த பிள்ளை
1993 நல்லதே நடக்கும்
1993 பார்வதி என்னை பாரடி
1993 அக்கரைச் சீமையிலே
1993 முத்துபாண்டி
1994 வீட்டைப் பாரு நாட்டைப் பாரு
1994 செவத்த பொண்ணு
1994 தாய் மனசு
1996 திரும்பிப்பார்
1996 விஸ்வநாத்
1997 தம்பி துரை
1998 சந்தோசம்
1998 பொன்மானைத் தேடி
2001 நந்தா
2003 தாயுமானவன்
2007 பருத்திவீரன்
2007 வீரமும் ஈரமும்
2009 அழகர் மலை
2009 பிஞ்சு மனசு
2010 விலை
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம்
2012 ஆரஞ்ச்
2013 அலெக்ஸ் பாண்டியன்
2013 கீறிபுள்ள
2014 அரண்மனை
2016 மீனாட்சி காதலன் இளங்கோவன்
2016 சௌகார்பேட்டை
2016 எனக்கு இன்னொரு பெயர் இருக்கு
2017 பண்டிகை
2018 கடைக்குட்டி சிங்கம்
தாமரை மணாள செண்டையார்
2018 கோலமாவு கோகிலா
2019 100
2019 பிக் பாஸ் தமிழ் 3

வெளி இணைப்புகள்

நடிகர் சரவணன் – விக்கிப்பீடியா

Actor Saravanan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *