நடிகர் குரு சோமசுந்தரம் | Actor Guru Somasundaram

குரு சோமசுந்தரம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என்றழைக்கப்படுகிறார். தற்பொழுது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.


திரைப்படத்துறை


குரு சோமசுந்தரம் 2002 – 2011 ஆண்டு காலத்தில் கூத்துப்பட்டறையில் இணைந்து நாடகங்களை உருவாக்கினார்.


2003 ஆம் ஆண்டு சந்திரஹரி நாடகத்தில் இவரைக் கண்ட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, 2008 ஆம் ஆண்டு இவரை அழைத்து தனது ஆரண்ய காண்டம் எனும் திரைப்படத்தில் ‘காளையன்’ எனும் வேடத்தில் நடிக்க வைத்தார். அவ்வேடம் பலத்த வரவேற்பை பெற்றது. பின், 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தின் ‘கடல்’ திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.


கூத்துப்பட்டறையிலிருந்து வெளியேறிய பின் 2013 ஆம் ஆண்டு 5 சுந்தரிகள் எனும் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்ததின் வாயிலாக மலையாளத் திரையுலகில் கால் பதித்தார். இதே ஆண்டில் இயக்குனர் சுசீந்தரனின் பாண்டிய நாடு திரைப்படத்தில் விசாலின் அண்ணனாக வேடமேற்று நடித்தார். 2014 ஆம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தில் நடிப்புக் கலை பயிற்றுனராக நடித்திருந்தார். நிகழ் வாழ்க்கையிலும் பாபி சிம்காவுக்கு இவர் நடிப்புக் கலையை பயிற்றுவித்தார்..


திரைப்பட விவரம்

நடித்த திரைப்படங்கள்

2011 ஆரண்ய காண்டம்
2013 கடல்
2013 5 சுந்தரிகள்
2013 பாண்டிய நாடு
2014 ஜிகர்தண்டா
2015 49 – O
2015 பென்ச் டாக்கீஸ் – த பர்ஸ்ட் பென்ச்
2015 தூங்காவனம்
2015 கோகினூர்
2016 ஜோக்கர்
2016 குற்றமே தண்டனை
2017 யாக்கை
2018 ஓடு ராஜா ஓடு
2018 வஞ்சகர் உலகம்
2019 பேட்ட
2021 இது வேதாளம் சொல்லும் கதை
2021 மாமனிதன்
2021 மஞ்ச சட்ட பச்ச சட்ட
2021 காதலிக்க யாருமில்லை
2021 பரமகுரு
2021 மின்னல் முரளி
2021 மாறா
2021 க்
2021 இந்தியன்-2

வலைத் தொடர்

2020 டாப்லெஸ்

வெளி இணைப்புகள்

நடிகர் குரு சோமசுந்தரம் – விக்கிப்பீடியா

Actor Guru Somasundaram – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *