மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
துவக்க வாழ்க்கை
மயில்சாமி 1965 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று சத்தியமங்கலத்தில் பிறந்தார். நடகராகும் ஆசையுடன் 1977இல் சென்னைக்கு வந்தார். ஒரு உணவகத்தில் பகுதி நேர வேலையில் சேர்ந்து, திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். தாவணிக் கனவுகள் படத்தின் படப்பிடிப்பில் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அவரிடம் தன் பலகுரல் திறமையைக் காட்டினார். ம. கோ. இராவின் குரலில் பேசிக்காட்டி அவரைக் கவர்ந்தார். அன்றைய நாளை அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.இரண்டாவதாக கன்னிராசி திரைப்படத்தில் கவுண்டமணியிடன் பேசி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கத் துவங்கினார்.
தொழில்
இந்நிலையில் 1987இல் மயில்சாமியும், இலட்சுமண் சுருதி இலட்சுமணனும் இணைந்து வெளியிட்ட “சிரிப்போ சிரிப்பு” பலகுரல் நகைச்சுவை ஒலிப்பேழை பெரிய வெற்றியை ஈட்டியது. இதன்பிறகு அடுத்து வந்த பத்தாண்டுகள் உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்.
புத்தாயிரத்துக்குப் பிறகு விவேக்குடன் நடிகத் துவங்கியது இவரது திரைப்பட வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவரின் திறமை திரைப்படங்களில் பலவகையில் வெளிப்பட்டது. பின்னர் இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக வலம் வந்தார். மயில்சாமி தமிழ் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடுவராகவும் அறிமுகமானார்.
தனிப்பட்ட வாழ்க்கை
2009 அக்டோபரில், மயில்சாமி தன் மகன் அருமைநாயகம் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்து, அவருக்கு அன்பு என்ற திரைப் பெயரை வழங்கினார். 2011 ஆம் ஆண்டு ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் திரைப்படத்தில் அன்பு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோஷ்னா பெர்னாண்டோ நடித்தார் ஆனால் படம் வெளியான உடனேயே கிடப்பில் போடப்பட்டது.அன்பு பின்னர் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜசேகரின் அந்த 60 நாட்கள் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார், இது சந்திரிகாவுடன் இணைந்து நடித்த ஒரு கற்பனை நகைச்சுவை படம். ஆனால் அந்த படம் இறுதியில் வெளியாகவில்லை. அதேபோல், 2015 இல் கைவிடபட்ட மற்றொரு திரைப்படம் கொக்கு ஆகும், இதில் பாப்ரி கோஷ் உடன் அன்பு நடிக்கவிருந்தார்.2017 ஆம் ஆண்டில், பிருந்தா மற்றும் நிஹாரிகாவுடன் இணைந்து வேதமணியின் திரிபுரம் மற்றும் சுரபி திவாரி மற்றும் கோஷாவுடன் இணைந்து நடித்த ஒரு பொம்மலாட்டம் நடக்குது ஆகியவற்றின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இரண்டு படங்களிலும் முன்னேற்றமில்லை.2018 ஆம் ஆண்டில், எம். எப். உசைன் இயக்கிய அல்டி படத்தில் மனிஷா ஜித்துடன் நடித்தும், சிதம்பரம் ரயில்வே கேட் படத்தில் நீரஜாவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்.
மறைவு
மயில்சாமி 19 பிப்ரவரி 2023 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்
திரையியல்
நடித்த திரைப்படங்கள்
1984 | தாவணிக் கனவுகள் |
1985 | கன்னிராசி |
1988 | என் தங்கச்சி படிச்சவ |
1989 | அபூர்வ சகோதரர்கள் |
வெற்றி விழா | |
1990 | பணக்காரன் |
மைக்கேல் மதன காமராஜன் | |
1991 | ராசாத்தி வரும் நாள் |
1991 | என்னருகில் நீ இருந்தால் |
1992 | சின்ன கவுண்டர் |
செந்தமிழ் பாட்டு | |
1993 | உழைப்பாளி |
உடன் பிறப்பு | |
வால்டர் வெற்றிவேல் | |
1994 | டூயட் |
1995 | வில்லாதி வில்லன் |
ஆசை | |
மனதிலே ஒரு பாட்டு | |
1996 | அவதார புருஷன் |
சுந்தர புருஷன் | |
ஞானப்பழம் | |
டேக் இட் ஈசி ஊர்வசி | |
1997 | சக்தி |
வாய்மையே வெல்லும் | |
நேருக்கு நேர் | |
பெரிய மனுஷன் | |
1998 | பொன்மனம் |
இரத்னா | |
1999 | ஹவுஸ்புல் |
நினைவிருக்கும் வரை | |
ஆனந்த பூங்காற்றே | |
முகம் | |
2000 | ஏழையின் சிரிப்பில் |
அன்னை | |
தை பொறந்தாச்சு | |
ஜேம்ஸ் பாண்டு | |
கண்ணன் வருவான் | |
பெண்ணின் மனதைத் தொட்டு | |
உன்னைக் கண் தேடுதே | |
கண்ணுக்கு கண்ணாக | |
பாளையத்து அம்மன் | |
சீனு | |
2001 | லூட்டி |
நாகேஸ்வரி | |
உள்ளம் கொள்ளை போகுதே | |
என் புருசன் குழந்தை மாதிரி | |
லிட்டில் ஜான் | |
தில் | |
கண்டேன் சீதையை | |
விஸ்வநாதன் ராமமூர்த்தி | |
வேதம் | |
12 பி | |
ஆளவந்தான் | |
தவசி | |
பூவெல்லாம் உன் வாசம் | |
பார்த்தாலே பரவசம் | |
விண்ணுக்கும் மண்ணுக்கும் | |
ஆண்டான் அடிமை | |
2002 | விவரமான ஆளு |
உன்னை நினைத்து | |
விண்ணுக்கும் மண்ணுக்கும் | |
ஏப்ரல் மாதத்தில் | |
வருஷமெல்லாம் வசந்தம் | |
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே | |
தென்காசிப்பட்டிணம் | |
ராஜா | |
நினைக்காத நாளில்லை | |
கார்மேகம் | |
மாறன் | |
2003 | தூள் |
வசீகரா | |
பல்லவன் | |
மிலிட்டரி | |
லேசா லேசா | |
ஜெயம் | |
விசில் | |
காதல் கிசு கிசு | |
2004 | கண்களால் கைது செய் |
கில்லி | |
சவுண்ட் பார்ட்டி | |
கிரி | |
2005 | தேவதையைக் கண்டேன் |
அயோத்தியா | |
கண்ணாடிப் பூக்கள் | |
லண்டன் | |
சச்சின் | |
பிப்ரவரி 14 | |
பொன்னியின் செல்வன் | |
சாணக்கியா | |
உணர்ச்சிகள் | |
2006 | ரெண்டு |
பரமசிவன் | |
தலைநகரம் | |
திமிரு | |
நெஞ்சில் ஜில் ஜில் | |
திருவிளையாடல் ஆரம்பம் | |
2007 | நான் அவனில்லை |
நினைத்து நினைத்துப் பார்த்தேன் | |
சிவாஜி | |
மா மதுரை | |
தொட்டால் பூ மலரும் | |
அன்புத்தோழி | |
மலைக்கோட்டை | |
கண்ணாமூச்சி ஏனடா | |
மச்சக்காரன் | |
2008 | தோட்டா |
வைத்தீஸ்வரன் | |
வேதா | |
நேபாளி | |
பாண்டி | |
ஜெயம் கொண்டான் | |
தனம் | |
திண்டுக்கல் சாரதி | |
சிலம்பாட்டம் | |
பஞ்சாமிர்தம் | |
குசேலன் | |
சூர்யா | |
2009 | படிக்காதவன் |
குரு என் ஆளு | |
ஆறுபடை | |
ராஜாதி ராஜா | |
தோரணை | |
மாயாண்டி குடும்பத்தார் | |
ராகவன் | |
அய்யாவழி | |
சிரித்தால் ரசிப்பேன் | |
எங்கள் ஆசான் | |
மோதி விளையாடு | |
மலை மலை | |
மலையன் | |
சிந்தனை செய் | |
கந்தசாமி | |
ஆறுமுகம் | |
கண்டேன் காதலை | |
நான் அவனில்லை 2 | |
2010 | குட்டி |
ரசிக்கும் சீமானே | |
தீராத விளையாட்டுப் பிள்ளை | |
அழகான பொண்ணுதான் | |
அம்பாசமுத்திரம் அம்பானி | |
கோரிப்பாளையம் | |
தொட்டுப்பார் | |
மருதானி | |
தில்லாலங்கடி | |
உத்தம புத்திரன் | |
2011 | சிறுத்தை |
ஆடு புலி | |
எத்தன் | |
சபாஷ் சரியான போட்டி | |
காஞ்சனா | |
காசேதான் கடவுளடா | |
மைதானம் | |
முதல் இடம் | |
புலிவேசம் | |
போட்டா போட்டி | |
வேலூர் மாவட்டம் | |
ஒஸ்தி | |
ராஜபாட்டை | |
யுவன் யுவதி | |
சதுரங்கம் | |
2012 | மாசி |
ஆதி நாராயணா | |
விளையாட வா | |
அரியான் | |
ஆதி நாராயணா | |
நெல்லை சந்திப்பு | |
கோழி கூவுது | |
2013 | நான் ராஜாவாகப் போகிறேன் |
பட்டத்து யானை | |
சத்திரம் பேருந்து நிலையம் | |
ரகளபுரம் | |
தகராறு | |
2014 | வீரம் |
கலவரம் | |
இங்க என்ன சொல்லுது | |
இது கதிர்வேலன் காதல் | |
நான் தான் பாலா | |
யாமிருக்க பயமே | |
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | |
வேல்முருகன் போர்வெல்ஸ் | |
இரும்புக் குதிரை | |
நான் சிகப்பு மனிதன் | |
பொறியாளன் | |
தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் | |
கல்கண்டு | |
ஜெய்ஹிந்த் 2 | |
நாய்கள் ஜாக்கிரதை | |
திருமணம் எனும் நிக்காஹ் | |
விஞ்ஞானி | |
கனவு வாரியம் | |
2015 | காக்கி சட்டை |
வஜ்ரம் | |
காஞ்சனா 2 | |
வை ராஜா வை | |
போக்கிரி மன்னன் | |
ஸ்டராபெரி | |
வேதாளம் | |
உப்பு கருவாடு | |
திருட்டு ரயில் | |
2016 | போக்கிரி ராஜா |
மாப்ள சிங்கம் | |
அடிடா மேளம் | |
நாரதன் | |
ஜித்தன் 2 | |
கண்டேன் காதல் கொண்டேன் | |
மனிதன்n | |
கோ 2 | |
பாண்டியோட கலாட்டா தாங்கல | |
பைசா | |
கக்கக்கபோ | |
என்னமா கதை வுட்ரானுங்க | |
ரெமோ | |
கவலை வேண்டாம் | |
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | |
தில்லுக்கு துட்டு | |
2017 | யாக்கை |
மொட்ட சிவா கெட்ட சிவா | |
சங்கிலி புங்கிலி கதவத் தொற | |
போங்கு | |
இவன் தந்திரன் | |
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் | |
பொதுவாக எம்மனசு தங்கம் | |
ஆயிரத்தில் இருவர் | |
ஹரஹர மஹாதேவகி | |
சக்க போடு போடு ராஜா | |
2018 | காத்திருப்போர் பட்டியல் |
என்ன தவம் செய்தேனோ | |
காசுமேல காசு | |
ஆருத்ரா | |
அண்ணனுக்கு ஜே | |
2 | |
காற்றின் மொழி | |
சண்டக்கோழி 2 | |
2019 | சிகை |
எல். கே. ஜி. | |
பூமராங் | |
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா | |
களவாணி 2 | |
கூர்க்கா | |
காப்பான் | |
அருவம் | |
தணுசு ராசி நேயர்களே | |
திருப்பதி சாமி குடும்பம் | |
50/50 | |
2020 | சண்டிமுனி |
மூக்குத்தி அம்மன் | |
2021 | மலேசியா டூ அம்னீசியா |
தேவதாஸ் சகோதரர்கள் | |
சபாபதி | |
முருங்கைக்காய் சிப்ஸ் | |
2022 | அன்புள்ள கில்லி |
இடியட் | |
நெஞ்சுக்கு நீதி | |
வீட்ல விசேஷம் | |
லெஜண்ட் | |
உடன்பால் |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
1996 | மர்மதேசம் (இரகசியம்) | சந்தானகிருஷ்ணன் | சன் தொலைக்காட்சி |
2003 | காமெடி டைம் | தொகுப்பாளர் | சன் தொலைக்காட்சி |
2005 | டைமுக்கு காமெடி | தொகுப்பாளர் | ஜெயா தொலைக்காட்சி |
2019 | லொல்லுபா | தொகுப்பாளர் | சன் தொலைக்காட்சி |
குரல் கலைஞர்
- 1992 – கஸ்தூரி மஞ்சள் வடிவேலுக்காக
- 1996 – செல்வா மணிவண்ணனுக்காக
- 2001 – உள்ளம் கொள்ளை போகுதே
- 2004 – நியூ பிரம்மானந்தம், அலி ஆகியோருக்காக