பிரேம் நசீர் என்பவர் ஓர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மலையாளத் திரையுலகில் 610 திரைப்படங்களில் நடித்துள்ளார். உலகிலேயே அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமையும் பிரேம் நசிரையே சாரும். இவர் ஒரு ஆண்டில் (1979) மட்டும் 39 படங்கள் நடித்துள்ளார். இவர் 34 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் அப்துல் காதர் ஆகும். இவர் 1952ஆம் ஆண்டு நடித்த “மருமகன்” திரைப்படமே இவரது முதல் படமாகும்.