நடிகர் விவேக் | Actor Vivek

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 – 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

பிறப்பு

இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார். விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள்.

வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு. இவரது சொந்த ஊர் கோயில்பட்டி – இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார். ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர்.

மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்குபற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது.

இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார். அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில்குடும்பத்துடன் குடியேறினார்.

அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.

விருதுகள்

விஜய் விருதுகள்

  • அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகர் விருது.

பிலிம்பேர் விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – ரன் (2002)
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – சாமி (2003)
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – பேரழகன் (2004)
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – சிவாஜி (2007)

தமிழக அரசு விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – ரன் (2002)
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – பார்த்திபன் கனவு (2003)
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – சிவாஜி (2007)

மற்ற விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
  • சிறப்பு சான்றாயர் விருது – ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
  • சிறந்த ஆண் நகைச்சுவை விருது – எடிசன் விருதுகள்
  • சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
    பண்பலை வானொலி விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)

நன்மதிப்பு

  • பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா

நடித்த திரைப்படங்கள்

1987 மனதில் உறுதி வேண்டும்
1989 புதுப்புது அர்த்தங்கள்
1990 ஒரு வீடு இரு வாசல்
புது மாப்பிள்ளை
கேளடி கண்மணி
1991 இதயவாசல்
புத்தம் புது பயணம்
ஜென்ம நட்சத்திரம்
எம் ஜி ஆர் நகரில்
அன்பு சங்கிலி
1992 வெற்றிமுகம்
உரிமை ஊஞ்சலாடுகிறது
தம்பி பொண்டாட்டி
1993 உழைப்பாளி
பாஸ் மார்க்
பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வீரா (1994)
புதிய மன்னர்கள்
வாச்மென் வடிவேல்
வனஜா கிரிஜா
வா மகளே வா
வாங்க பாட்னார் வாங்க
நம்ம அண்ணாச்சி
பொங்கலோ பொங்கல்
1995 நந்தவனத் தெரு
மாயாபஜார் 1995
தாயகம்
தொட்டில் குழந்தை
முத்துக் குளிக்க வாரீயளா
இளைய ராகம்
1996 காலமெல்லாம் காதல் வாழ்க
மைனர் மாப்பிள்ளை
அவதாரப் புருசன்
எனக்வொரு மகன் பிறப்பான்
சுபாஷ்
1997 நேருக்கு நேர்
தினமும் என்னைக் கவனி
பகைவன்
சிஷ்யா
பெரிய இடத்து மாப்பிள்ளை
1998 காதல் மன்னன்
மறுமலர்ச்சி
காதலே நிம்மதி
உன்னுடன்
சொல்லாமல்
கண்ணெதிரே தோன்றினாள்
அரிச்சந்திரா
நாம் இருவர் நமக்கு இருவர்
1999 நினைவிருக்கும் வரை
பூமகள் ஊர்வலம்
வாலி
ஒருவன்
விரலுக்கேத்த வீக்கம்
உனக்காக எல்லாம் உனக்காக
முகம்
அதான்டா இதான்டா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னருகே நானிருந்தால்
ஆசையில் ஒரு கடிதம்
2000 திருநெல்வேலி
ஏழையின் சிரிப்பில்
சுதந்திரம்
தை பொறந்தாச்சு
முகவரி
அலைபாயுதே
சந்தித்த வேளை
கந்தா கடம்பா கதிர்வேலா
குஷி
கரிசக்காட்டு பூவே
பெண்ணின் மனதை தொட்டு
டபுள்ஸ்
உன்னைக் கண் தேடுதே
பட்ஜெட் பத்மநாபன்
கண்டேன் சீதையை
பாளையத்து அம்மன்
ப்ரியமானவளே
சீனு
2001 லூட்டி
நாகேஸ்வரி
மின்னலே
எங்களுக்கும் காலம் வரும்
குட்டி
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும்
சூப்பர் குடும்பம்
பத்ரி
மிடில் கிளாஸ் மாதவன்
லவ்லி
தில்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பூவெல்லாம் உன் வாசம்
அள்ளித் தந்த வானம்
12 பி
ஷாஜகான்
மனதைத் திருடி விட்டாய்
பார்த்தாலே பரவசம்
மஜ்னு
வடுகப்பட்டி மாப்பிள்ளை
2002 விவரமான ஆளு
அழகி
ரோஜாக்கூட்டம்
தமிழன்
கோட்டை மாரியம்மன்
தென்காசிப்பட்டணம்
ஷக்கலக்க பேபி
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
யூத்
ரன்
நம்ம வீட்டு கல்யாணம்
யுனிவர்சிட்டி
காதல் வைரஸ்
2003 காதல் சடுகுடு
பாப் கார்ன்
சாமி
அன்பே அன்பே
பார்த்திபன் கனவு
லேசா லேசா
விசில்
ஐஸ்
காதல் கிசு கிசு
தித்திக்குதே
த்ரீ ரோஸஸ்
தென்னவன்
தூள்
பாய்ஸ்
அலை
திருமலை
எனக்கு 20 உனக்கு 18
ஜூட்
2004 உதயா
எதிரி
பேரழகன்
செல்லமே
அரசாட்சி
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி
2005 தக திமி தா
கனா கண்டேன்
அந்நியன்
அன்பே வா
வணக்கம் தலைவா
2006 சரவணா
ஆதி
பரமசிவன்
மதராசி
கள்வனின் காதலி
திருட்டு பயலே
மது
நீ வேணும்டா செல்லம்
ஜாம்பவான்
2007 ஆழ்வார்
அகரம்
சிவாஜி
துள்ளல்
வீராப்பு
கிரீடம்
உற்சாகம்
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
2008 தூண்டில்
சண்டை
சிங்கக்குட்டி
குருவி
ஆயுதம் செய்வோம்
ஜெயம் கொண்டான்
துரை
பொம்மலாட்டம்
2009 படிக்காதவன்
பெருமாள்
1977
குரு என் ஆளு
இந்திர விழா
ஐந்தாம் படை
அந்தோனி யார்?
2010 தம்பிக்கு இந்த ஊரு
சிவப்பு மழை
மகனே என் மருமகனே
சிங்கம்
பெண் சிங்கம்
பலே பாண்டியா
வாடா
உத்தம புத்திரன்
2011 சீடன்
பவானி ஜபிஎஸ்
மாப்பிள்ளை
ஒரு நுனாக்காத
வெடி
2014 வேலையில்லா பட்டதாரி
2015 என்னை அறிந்தால்

தயாரிப்பில்

1 கந்தா
2 நான்காம் முறை
3 கடமை கன்னியம் கட்டுப்பாடு
4 நல்வரவு
5 சித்திரம்
6 வழிப்போக்கன்
7 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
8 இளமை இதோ இதோ
9 சொல்லி அடிப்பேன்

மறைவு

இவர் 16 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்

வெளி இணைப்புகள்

நடிகர் விவேக் நகைச்சுவை – விக்கிப்பீடியா

Actor Vivek – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *