அபர்ண நாயர் (Aparna Nair) (பிறப்பு 30 நவம்பர் 1989) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் தோன்றி வருகிறார்.
சுயசரிதை
அபர்ணா, கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள தேஞ்ஞிப்பாலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், கொச்சி, செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். அ. க. லோகிததாசின் இயக்கத்தில் வெளியான “நிவேதயம்” என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார். பிறகு, “சாயாமுகி” என்ற படத்தில் பஞ்சாலியை சித்தரித்தார். இதில் மோகன்லால் மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு திரைப்படமான மேகதீர்த்தத்தில் மணிகுட்டனுக்கு இணையாக கவியூர் பொன்னம்மாவின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். கயம் என்ற படத்தில் நடிகர் பாலாவின் இணையாக நடித்தார். 2010 இல், இவர் காக்டெய்லில் நடித்தார். இவரது அறிமுக தமிழ் அறிமுகம் இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய “எதுவும் நடக்கும்” என்ற படத்தின் மூலம் தமிழகத் திரைப்படத்துறையில் நுழைந்தார்.
பின்னர் இவர் பியூட்டிஃபுல் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார். அடுத்து சங்கர் இயக்கிய ஸ்ட்ரீட்லைட் என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். மல்லு சிங், தட்டத்தின் மராயத்து போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் “ரன் பேபி ரன்” என்ற படத்திலும் நடித்தார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
நடிகை அபர்ணா நாயர் – விக்கிப்பீடியா
Actress Aparna Nair – Wikipedia