நடிகை கே. டி. ருக்மணி | Actress K.T. Rukmini

கே. டி. ருக்மணி (K. T. Rukmini) தமிழ்த் திரைப்பட உலகின் முதல் அதிரடி நாயகியாவார்.


ஊமைப்படங்களில்


ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் ருக்மணி ‘பேயும் பெண்மணியும்’. என்ற ஊமைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் இயக்குநர் ஆர். பிரகாசம் ஆவார். பின்னர் இம்பீரியல் ஸ்டுடியோவின் பாமா விஜயம், ராஜா சாண்டோ இயக்கிய விப்ரநாராயணா, சி.வி. ராமனின் இயக்கத்தில் விஷ்ணு லீலா போன்ற ஊமைப்படங்களிலும் ருக்மணி நடித்தார்.


முதல் அதிரடி நாயகி


அமர்நாத் இயக்கிய தமிழின் முதல் முழு நீள அதிரடித் திரைப்படமான மின்னல் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பின்போது குதிரைச் சவாரி செய்யும்போது கீழே விழுந்து பலத்த அடிபட்டு, மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்து, உடல் தேறியபின். ‘மின்னல் கொடி’ முடித்துக் கொடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து அதிரடிக் கதாநாயகி வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. கே. டி. ருக்மணி தமிழ் சினிமாவின் முதல் அதிரடிக் கதாநாயகி என்ற புகழைப் பெற்றார்.


நடித்த படங்கள்


கே. டி. ருக்மணி நடித்த படங்கள்


 • பாரிஜாத புஷ்பஹாரம் (1932)

 • தூக்குத் தூக்கி (1935)

 • மனோகரா (1936)

 • மின்னல் கொடி (1937)

 • பரமசூரமோகினி (1937)

 • சாமுண்டீஸ்வரி (1937)

 • பாக்கியலீலா (1938)

 • பக்தா குமரன் (1939)

 • வீர்ரமணி (1939)

 • ஜெயக்கொடி (1940)

 • திருமங்கை ஆழ்வார் (1940)

 • பொன்னருவி (1947)

 • வெளி இணைப்புகள்

  நடிகை கே. டி. ருக்மணி – விக்கிப்பீடியா

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.