சி. ஆர். சரஸ்வதி (C. R. Saraswathi) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவுக் குழுவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.
தொழில்
சி. ஆர். சரஸ்வதி 1979 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1999 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், ஜெயலலிதா அவர்களால் அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்.
விருதுகள்
தமிழ் திரையுலகில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
நடித்த திரைப்படங்கள்
1979 | சுவர் இல்லாத சித்திரங்கள் |
---|---|
1987 | எங்க சின்ன ராசா |
1988 | அண்ணாநகர் முதல் தெரு |
1991 | புதிய ராகம் |
1991 | வசந்தகால பறவை |
1992 | பொண்டாட்டி ராஜ்ஜியம் |
1992 | தங்க மனசுக்காரன் |
1992 | அபிராமி |
1992 | இளவரசன் |
1992 | சேவகன் |
1992 | சிங்கார வேலன் |
1992 | அம்மா வந்தாச்சு |
1992 | காவியத் தலைவன் |
1992 | நாளைய செய்தி |
1993 | பிரதாப் |
1993 | மணிக்குயில் |
1993 | எங்க முதலாளி |
1993 | பொறந்த வீடா புகுந்த வீடா |
1993 | மாமியார் வீடு |
1994 | அமைதிப்படை |
1994 | அத்த மக ரத்தினமே |
1994 | கில்லாடி மாப்பிள்ளை |
1994 | சுப்பிரமணிய சாமி |
1995 | எங்கிருந்தோ வந்தான் |
1995 | பாட்டு பாடவா |
1995 | கர்ணா |
1995 | ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி |
1995 | காந்தி பிறந்த மண் |
1996 | வசந்த வாசல் |
1996 | புருஷன் பொண்டாட்டி |
1996 | செல்வா |
1997 | புதுநிலவு |
1997 | ஒன்ஸ்மோர் |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் |
1998 | என் உயிர் நீதானே |
1998 | நினைத்தேன் வந்தாய் |
1998 | சிவப்பு நிலா |
1999 | கெஸ்ட் அவுஸ் |
1999 | மறவாதே கண்மணியே |
2001 | என் புருசன் குழந்தை மாதிரி |
2002 | பம்மல் கே. சம்பந்தம் |
2002 | காமராசு |
2002 | கார்மேகம் |
2002 | இவன் |
2006 | 47ஏ பெசன்ட் நகர் வரை |
2007 | நம் நாடு |
2008 | பழனி |
வெளி இணைப்புகள்
நடிகை சி. ஆர். சரஸ்வதி – விக்கிப்பீடியா
Actress C. R. Saraswathi – Wikipedia