சனம் ஷெட்டி (Sanam Shetty) என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றறவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னட படங்களில் நடித்துவருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் பருவம் 4 இன் போட்டியாளர் ஆவார்.
தொழில்
சனம் பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசுக்ககூடியவர். இது தனது நடிப்புத் தொழிலுக்கு நன்மையானது என்று கருதுகிறார். கடந்த 2 ஆண்டுகளாக ப்ரீத்தி கிச்சன்வேர் நிறுவனத்தின் முகமாக சனம் உள்ளார். மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்ட இவர் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்றார், அப்போது முதலிடம் பெற்ற மீரா மிதுனின் மோசடி நடவடிக்கைகள் காரணமாக அவரது பட்டம் இரத்து செய்யப்பட்ட பின்னர் இவர் மிஸ் தென்னிந்தியா 2016 ஆனார். இங்கிலாந்தில் இருந்தபோது, இவர் இலங்கை ஆவணப்படத்தில் நடித்துள்ளார். இவரது வெற்றிகரமான மாடலிங் தொழிலால், இவர் பட வாய்ப்புகளைப் பெற்றார். இறுதியில், நடிப்புத் தொழிலுக்காக சென்னையில் குடியேறினார்.
சனமின் முதல் படமாக அம்புலி அமைந்தது. பின்னர் இவர் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார். கே. ராகவேந்திர ராவின் ‘ இன்டின்டா அனாமையா ‘ படத்தின் வழியாக தெலுங்கு திரைப்படத் துறைக்கு அறிமுகமாகவிருந்தார் சனம். ஆனால் இன்டின்டா அனமய்யா படம் வெளியாகவில்லை. இவருடைய அடுத்த படங்களாக ஜே. ஆர் கண்ணன் எழுதிய தமிழ்ப் படமான மாயை படமும், மலையாளப் படமான அஜித் ரவி பெகாசஸ் என்பவர் இயக்கிய ராவு என்ற மலையாளப்படமும் மற்றும் மம்மூட்டியுடன் ஜோடியாக நடித்த தெய்வதிந்தே ஸ்வந்தம் கிளீட்டஸ். போன்ற படங்களில் நடித்தார்.
கலைவேந்தன் உட்பட பல தமிழ்ப் படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தமானார், அதில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது, அபாவணனின் கதாநாயகி சார்ந்த அதிரடிப் படம், இதில் சனம் ஒரு கருப்பு கச்சு பெற்ற குங் ஃபூ வீராங்கனையாக நடிக்கவிருந்தார், பாபு தூயவன் இயக்கிய கதம் கதம், மற்றும் விலாசம் . 2016 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் படங்கள், சவாரி மற்றும் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், இதில் வெளி நாட்டு வாழ் இந்தியரின் மனைவியாக நடித்தார், மேலும் தெலுங்கில் இவர் ஸ்ரீமந்துடு என்ற தெலுங்கு திரைப்படத்திலும். இவரின் முதல் கன்னட திரைப்படமான அதர்வா 2018 சூலையில் வெளியானது. தமிழில், சனம் தற்போது மேகி என்ற அதிரடி படத்தில் நடித்து தயாரிக்கிறார்.
நடித்த திரைப்படங்கள்
2012 | அம்புலி |
---|---|
2012 | சினிமா கம்பெனி |
2013 | மாயை |
2013 | ரவு |
2013 | தெவதிந்தே ஸ்வந்தம் கிளீட்டஸ் |
2014 | விலாசம் |
2015 | கதம் கதம் |
2015 | ஸ்ரீமந்துடு |
2015 | சிங்கம் 123 |
2015 | கலை வேந்தன் |
2015 | வெள்ளையா இருகிறவன் பொய் சொல்லா மாட்டன் |
2016 | சவாரி |
2016 | தகடு |
2016 | சதுரம் 2 |
2017 | பிரேமிகுடு |
2018 | இன்டின்டா அண்ணாமையா |
2018 | வரா |
2018 | 23 |
2018 | அதர்வா |
2018 | டிக்கெட் |
2020 | வால்டர் |
2020 | மகா |
தொலைக்காட்சி
2018 | வில்லா டு வில்லேஜ் |
---|---|
2020 | பிக் பாஸ் தமிழ் 4 |
வெளி இணைப்புகள்
நடிகை சனம் ஷெட்டி – விக்கிப்பீடியா