ஷமிதா ஷெட்டி (Shamita Shetty) (பிறப்பு 2 பிப்ரவரி 1979) ஒரு இந்திய பாலிவுட் நடிகை மற்றும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் மொஹபத்தியான் என்ற வெற்றி படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர், அவரது குறிப்பிடத்தக்க பணியானது மேரே யார் கி ஷாதி ஹாய் (2002), ஜீஹர் (2005), பிவாஃபா (2005) மற்றும் கேஷ் (2007) ஆகியவை அடங்கும். 2009 ஆம் ஆண்டில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்துப் போட்டியிட்டார். இந்நிகழ்ச்சியில் நான்காம் இடம் பெற்றார். இவர் நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரி.
ஆரம்ப வாழ்க்கை
மங்களூரு குடும்பத்தைச் சேர்ந்த சுரேந்திர மற்றும் சுனந்தா ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.
தொழில்
2000 ஆம் ஆண்டில் ஆஷாத் சோப்ரா இயக்கிய யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படமான மொஹபத்தியான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் நடித்தற்காக ஐஐஃபா என்ற நிறுவனத்தின் 2001ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதைப் பெற்றார் . ஃபாரெப் என்ற திரைப்படத்தில் அவரது சகோதரி ஷில்பா ஷெட்டி உடன் அவர் ஒருமுறை பணிபுரிந்தார். உட்புற வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது படப் பணிகளுக்கு இடையேயும் உட்புற வடிவமைப்பு பணிகளைச் செய்து வந்தார். தனியாக ஒரு நிறுவனத்தையும் நிறுவி பணிசெய்கிறார். 201்1 வரை பணியாற்றியவர் அதன் பின் நான்கு வருடங்களுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் 2015இல் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.
விளம்பரப் படங்கள்
சமித்தா ஷெட்டி பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக பணிப்புறிந்தார். ஆடி, பான்டீன், ஐஐஜேஏஸ் என்ற நகைக்கடை முதலிய நிறுவனங்களுக்காக பணிப்புரிந்தார்.
வெளி இணைப்புகள்
நடிகை ஷமிதா ஷெட்டி – விக்கிப்பீடியா