சோனாலி பேந்திரே (மராத்தி: सोनाली बेंद्रे, 1 ஜனவரி 1975 இல் பிறந்தவர்) ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் சில மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியன் ஐடல் நான்காவது பருவம் மற்றும் இந்தியா’ஸ் காட் டேலண்ட்டின் நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவராவார்.
சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி
சோனாலி பேந்த்ரே பெங்களூர் மற்றும் மும்பையின் கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஹோலி க்ராஸ் உயர்நிலைப்பள்ளி, தானேயில், கல்வி பயின்றார். 12 நவம்பர் 2002 இல், திரைப்படத் தயாரிப்பாளர்/இயக்குனர் கோல்டி பெல்லை சோனாலி திருமணம் செய்துகொண்டார். 9 ஆகஸ்ட் 2005 இல், ப்ரீச் கேண்டி மருத்துவமனையில், சோனாலி ரன்வீர் என்கிற அவரது மகனைப் பெற்றெடுத்தார்.
தொழில் வாழ்க்கை
சோனாலி பேந்த்ரே “ஸ்டார் டஸ்ட் டேலண்ட் சர்ச்”சில் தேர்வாவதற்கு முன் ஒரு மாடலாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். சோனாலி பேந்த்ரே மும்பைக்கு அழைக்கப்பட்டு, இந்திய சினிமாத் துறையின் பல்வேறு சிறந்த நடிகர்கள் மற்றும் திறமையாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்றார். ஆக் (1994) திரைப்படத்தில் கோவிந்தாவிற்கு ஜோடியாக பிந்த்ரே முதல்முறையாகப் பாத்திரம் ஏற்று நடித்தார். எனினும் தொடக்கத்தில் ஒரு வெற்றி நடிகையாவதற்கு பிந்த்ரே மிகவும் சிரமப்பட்டார், பிந்த்ரேயின் பல பிறத் திரைப்படங்களுள் பாய் (1997),முராரி (தெலுங்குத் திரைப்படம்) சர்ஃபரோஷ் , ஜம்ஹம் , டூப்ளிகேட் , காதலர் தினம் (தமிழ்த் திரைப்படம்) , ஹம் சாத்-சாத் ஹெயின்: வி ஸ்டான்ட் யுனேட்டெட் (1999), தேரா மேரா சாத் ரஹே மற்றும் அனாஹட் (2003) போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பிற்காக விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றார். அனைத்து சிறந்த நான்கு கான்களுடன் (அமீர், ஷாருக், சைப் மற்றும் சல்மான்) ஜோடியாக நடித்த சில நடிகைகளில் இவரும் ஒருவராக அறியப்படுகிறார். அக்ஷய் குமார் சுனில் செட்டி, அஜய் தேவ்கான், சஞ்ஜய் தத் மற்றும் அனில் கபூர் போன்ற பாலிவுட்டின் பிற பெரிய நடிகர்கள் சிலருடனும் பிந்த்ரே ஜோடியாக நடித்துள்ளார்.
அவரது நடிப்புத் திறமைகள் நன்றாக கவனிக்கப்பட்டதன் காரணமாக, கத்தார்(1995) ,சபூட் , பம்பாய் , லஜ்ஜா மற்றும் மேஜர் சாப் போன்ற சிலத் திரைப்படங்களின் வழியாக நேர்த்தியாக நடனமாடுபவர் எனவும் அங்கீகரிக்கப்பட்டார். மிகவும் சிறந்த அழகான பாலிவுட் நடிகைகளில் பிந்த்ரேவும் ஒருவராக அடிக்கடி பட்டியலிடப்பட்டார். ஆப் கி சோனியா என்றழைக்கப்பட்ட அரங்க நாடகத்திலும் பிந்த்ரே நடித்தார். “கியா மஸ்தி கியா தூம்….!” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார். மேலும் இப்போது சோனி பொழுதுபோக்குத் தொலைக்காட்சியின் இந்தியன் ஐடாலின் நீதிபதிகளில் இவரும் ஒருவராக பங்கேற்று வருகிறார். 2003 இல், கல் ஹோ நா ஹோ வில் ஷாருக்கானின் மருத்துவராக பிந்த்ரே சிறப்புத் தோற்றம் அளித்திருந்தார் (கரன் ஜோஹரால் தயாரிக்கப்பட்டது), சைப் அலிக் கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். 26 பிப்ரவரி 2005 இல், சைப் அலிகான் மற்றும் பஃரீதா ஜலால் ஆகியோருடன் 50வது ஃபிலிம்பேர் விருதுகளை பிந்த்ரே தொகுத்து வழங்கினார். பிந்த்ரே தற்போது இந்தியன் ஐடால் 4 மற்றும் இந்தியா’ஸ் காட் டேலண்ட் ஆகிய நிகழ்ச்சிகளின் நடுவராக உள்ளார்.
விருதுகள்
1995 இல், ஃபிலிம்பேர் லக்ஸ் புதுமுக விருதை பேந்த்ரே வென்றார். 2001 இல், அனில் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து நடித்த ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹே வில் பேந்த்ரேவின் சிறந்த நடிப்புக்காக சிறந்த துணைநடிகைக்கான நட்சத்திரத் திரை விருதை அவர் வென்றார். நடிகர்களில் பரிந்துரைக்கப்பட்டு விருதை வென்றது இவர் மட்டுமே. லவ் கே லியே குச் பீ கரேகா போன்ற திரைப்படங்களில் அவரது காமிக் நடிப்புகளுக்காக பேந்த்ரே ஊக்கமூட்டப்பட்டார்.
தொலைக்காட்சித் தொழில்வாழ்க்கை
நடித்த திரைப்படங்கள்
1994 | ஆக் |
---|---|
1994 | நராஸ் |
1995 | த டான் |
1995 | கத்தார் |
1995 | தக்கார் |
1995 | பம்பாய் |
1996 | ரக்ஷக் |
1996 | இங்கிலீஷ் பாபு தேசி மேம் |
1996 | தில்ஜலே |
1996 | அப்னே தம் ஃபர் |
1996 | சபூத் |
1997 | பாய் |
1997 | தராசு |
1997 | குஹார் |
1998 | கீமாத்:தேய் ஆ பாக் |
1998 | டூப்ளிகட் |
1998 | ஹம் செ பட்கர் கௌன் |
1998 | மேஜர் சாப் |
1998 | அங்காரே |
1998 | ஜாக்ஹம் |
1999 | லவ் யூ ஹமேஷா |
1999 | காதலர் தினம் |
1999 | கண்ணோடு காண்பதெல்லாம் |
1999 | ஹம் சாத்-சாத் ஹெயின்: வி ஸ்டான்ட் யுனேட்டெட் |
1999 | தகேக்: எ புர்னின்ங் போசிசன் |
1999 | சர்ஃபரோஷ் |
2000 | தில் ஹி தில் மெய்ன் |
2000 | ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை |
2000 | டாய் அக்ஷர் ப்ரேம் கே |
2000 | ஜிஸ் தேஸ் மெய்ன் கங்கா ரெஹ்தா ஹெய்ன் |
2000 | பிரீத்ஸ் |
2001 | முராரி |
2001 | லவ் கே லியே குச் பி கரேங்கா |
2001 | லஜ்ஜா |
2001 | தேரா மேரா சாத் ரஹேன் |
2002 | இந்திரா |
2002 | கத்கம் |
2002 | மன்மதுது |
2003 | அநாஹத் |
2003 | பல்நதி ப்ரஹ்மனயாது |
2003 | சோரி சோரி |
2003 | கல் ஹோ நா ஹோ |
2004 | சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் |
2004 | அக பாய் அரேச்சா! |
2013 | ஒன்ஸ் அபான் அ டைம் மும்பை எகய்ன் |