லைலா (பிறப்பு: அக்டோபர் 24, 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.