நடிகை லட்சுமி மேனன் | Actress Lakshmi Menon

லட்சுமி மேனன் (பிறப்பு: மே 26, 1996) கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.


வாழ்க்கை


லட்சுமி மேனன் துபாய் கலைஞரான ‘ராமகிருஷ்ணன்’ மற்றும் நடன ஆசிரியர் ‘உஷா’ ஆகியோரின் மகள் ஆவார். இவர் தயார் மல்லாங்கிணறு என்ற ஊரில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடன ஆசிரியர் ஆவர், இங்கு தான் லட்சுமி மேனன் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.


தொழில்


2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். 2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வருகிறார்.

நடித்த திரைப்படங்கள்

2011 ரகுவிண்டெ சுவந்தம் ரசியா
2012 ஐடியல் கப்பிள்
சுந்தர பாண்டியன்
கும்கி
2013 குட்டிப் புலி
மஞ்சப்பை
சிப்பி
பாண்டிய நாடு
வசந்த குமாரன்
2014 நான் சிகப்பு மனிதன் [6]
ஜிகர்தண்டா
சிப்பாய்
அவதாரம்
2015 கொம்பன்
2016 றெக்க (திரைப்படம்)

பாடிய பாடல்கள்

2014 ஒரு ஊருல ரெண்டு ராஜா

வெளி இணைப்புகள்

நடிகை லட்சுமி மேனன் – விக்கிப்பீடியா

Actress Lakshmi Menon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *