லலிதா குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் ஆவார். இவர் மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்), புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை (திரைப்படம்) and சிகரம் (திரைப்படம்) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
குடும்பம்
1994 -ல் நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர். 2004ல் சித்து இறந்தார். அதன்பின் 2009ல் பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்தார்.
நடித்த திரைப்படங்கள்
1987 | மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்) |
---|---|
1988 | வீடு மனைவி மக்கள் |
1989 | புதுப்புது அர்த்தங்கள் |
1990 | புலன் விசாரணை (திரைப்படம்) |
1990 | உலகம் பிறந்தது எனக்காக |
1990 | 13-ம் நம்பர் வீடு |
1991 | சிகரம் (திரைப்படம்) |
1993 | பார்வதி என்னை பாரடி |
1995 | நாடோடி மன்னன் |
1995 | மறுமகன் |
TBD | செல்வா (இயக்குநர்) |
வெளி இணைப்புகள்
நடிகை லலிதா குமாரி – விக்கிப்பீடியா