வாணிஸ்ரீ, (இயற்பெயர் இரத்தின குமாரி, பிறப்பு: ஆகத்து 3, 1948) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் மூன்று முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது, உட்பட நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
இவர், இத்தரு அம்மாயிலு (1972), கங்கா மங்கா, சீவனா சோதி(1975), மற்றும் சில்பி கிருட்டிணடு (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் சிவாஜி கணேசனுடன் உயர்ந்த மனிதன் (1968), நிறைகுடம் (1969), குலமா குணமா (1971), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974), ரோஜாவின் ராஜா (1976), இளைய தலைமுறை (1977), புண்ணிய பூமி (1978), வாழ்க்கை அலைகள் (1978) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார்.
மேலும் எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன் (1968), தலைவன் (1970), மற்றும் ஊருக்கு உழைப்பவன் (1976) ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்
1980 முதல் – தற்போது வரை
1970 களின் பிற்பகுதியில், திரைப்படங்களில் நடித்த பிறகு 1980 ஆம் ஆண்டு டாக்டா்.கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு இரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர். பின்பு 1980 களின் பிற்பகுதியில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.