நடிகை வசுந்தரா தேவி | Actress Vasundhara Devi

வசுந்தரா தேவி (Vasundhara Devi, 1917 – செப்டம்பர் 7, 1988) தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகியும் ஆவார். இவர் பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் ஆவார்.


வசுந்தரா 1941 ஆம் ஆண்டில் ரிஷ்யசிருங்கர் திரைப்படம் மூலம் அறிமுகமானார். 1943 இல் வெளியான மங்கம்மா சபதம் திரைப்படத்தில் மங்கம்மாவாக நடித்துப் புகழ் பெற்றார். வசுந்தராதேவியும், மகள் வைஜயந்திமாலாவும் இணைந்து பைகாம் (1959) என்ற இந்தித் திரைப்படத்திலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான இரும்புத்திரை திரைப்படத்திலும் நடித்தனர்.


வசுந்தரா எம். டி. ராமன் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்கள் பின்னர் மணமுறிப்பு செய்தனர். வசுந்தராதேவி 1988 செப்டம்பர் 7 இல் மறைந்தார்.


நடித்த திரைப்படங்கள்


  • ரிஷ்யசிருங்கர், 1941

  • மங்கம்மா சபதம், 1943

  • நாட்டிய ராணி 1949

  • இரும்புத்திரை, 1960

  • வெளி இணைப்புகள்

    நடிகை வசுந்தரா தேவி – விக்கிப்பீடியா

    Actress Vasundhara Devi – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *