நடிகை விசித்ரா | Actress Vichithra

விசித்ரா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி வேடங்களில் நடித்துள்ளனர்.


திரை வாழ்க்கை


விசித்ரா பத்தாவது படிக்கும் பொழுது போர்க்கொடி என்ற படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகவில்லை. அதன் பிறகு இயக்குனர் ஜாதி மல்லி திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த திரைப்படம் நல்வாய்ப்புகளை பெற்று தந்தது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.


இவர் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.


இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு புனேவில் தங்கிவிட்டார்.


தொலைக்காட்சி தொடர்


சன் தொலைக்காட்சியில் வேணு அரவிந்த் அவர்களுக்கு இணையாக வாழ்க்கை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். மாமி சின்ன மாமி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 2019 இல் சன் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.


குடும்ப வாழ்க்கை


விசித்ரா நடிகரான வில்லியம்ஸ் என்பவரின் மகளாவார். வில்லியம்ஸ் மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படத்தில் நடித்துள்ளார். பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் வேலை கிடைத்தமையால் அதிகம் நடிக்கவில்லை. விசித்திராவுக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளார்கள்.


விசித்திரா பத்தாவது படிக்கும் போது திரைதுறைக்கு வந்தமையால் படிப்பினை தொடர இயலவில்லை. பிறகு தபால் முறை படிப்பின் மூலமாக பி.ஏ.சைக்கலாஜி, எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.


2001 இல் ஷாஜி என்பவரை விசித்திரா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன.


2011ல் இவரது தந்தை ஒரு கொள்ளை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்

1991 போர்க்கொடி
1992 அவள் ஒரு வசந்தம்
1992 சின்னத்தாயி
1992 தலைவாசல்
1992 தேவர் மகன்
1992 Ezhamedam
1993 அமராவதி
1993 சபாசு பாபு
1993 எங்க முதலாளி
1993 ஜாதி மல்லி (திரைப்படம்)
1994 ரசிகன் (திரைப்படம்)
1994 இராவணன்
1993 ஆத்மா
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
1994 வீரா
1994 மணிரத்னம்
1994 வண்டிச்சோலை சின்ராசு
1994 அமைதிப்படை (திரைப்படம்)
1995 முத்து
1995 வில்லாதி வில்லன்
1995 அசுரன்
1995 சீதனம் (திரைப்படம்)
1995 ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்)
1995 பெரிய குடும்பம்
1995 தொட்டாசிணுங்கி (திரைப்படம்)
1995 போக்கிரி ராஜா
1996 மாப்பிள்ளை மனசு பூப்போல
1996 ராஜாளி
1996 செல்வா
1997 சாதி சனம்
1997 எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்)
1997 ராசி (திரைப்படம்)
1997 சிஷ்யா
1997 சாம்ராட்
1997 காதல் பள்ளி
1998 பொன்மானைத் தேடி
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான்
1998 கிழக்கும் மேற்கும்
1998 கிங்
1998 பொண்னு வெளையற பூமி
1998 பூந்தோட்டம்
1998 ஹரிச்சந்திரா
1999 தொடரும் (திரைப்படம்)
1999 அடுத்தக் கட்டம்
1999 முதல் எச்சரிக்கை
1999 சுயம்வரம் (1999 திரைப்படம்)
1999 உனக்காக எல்லாம் உனக்காக
1999 பொம்பளைங்க சமாச்சாரம்
1999 பொண்ணு வீட்டுக்காரன்
1999 ஜெயம்
1999 கண்மணி உனக்காக
2000 பெண்கள்
2000 கந்தர்வ ராத்திரி
2001 என் இனிய பொன் நிலாவே
2001 கிருஷ்ணா கிருஷ்ணா
2001 சிறீவரும் காளை
2001 தீர்ப்புகள் மாற்றப்படலாம்
2002 இரவு பாடகன்

தொலைக்காட்சி

2019 ராசாத்தி

வெளி இணைப்புகள்

நடிகை விசித்ரா – விக்கிப்பீடியா

Actress Vichithra – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *