நடிகை விமலா ராமன் | Actress Vimala Raman

விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


வாழ்க்கைக் குறிப்பு


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000வது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006 ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்


திரையுலகில்


2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன் ராய் இயக்கத்தில் நடித்தார்.


நடித்த திரைப்படங்கள்


விருதுகள்


  • 2004 – Miss India Australia 2004 விருது

  • Miss India Australia CyberQueen

  • நடித்த திரைப்படங்கள்

    பொய் தமிழ்
    டைம் மலையாளம்
    பிரணயகாலம் மலையாளம்
    சூரியன் மலையாளம்
    நஸ்ராணி மலையாளம்
    ரோமியோ மலையாளம்
    கல்கத்தா நியூஸ் மலையாளம்
    காலேஜ் குமரன் மலையாளம்
    ராமன் தேடிய சீதை தமிழ்
    டுவெண்டி:20 மலையாளம்
    அபூர்வா மலையாளம்
    எவரெய்னா எப்புடெய்னா தெலுங்கு
    சுக்களாந்தி அம்மை சக்கனைனா அப்பாய் தெலுங்கு
    ரங்கா த டொஙா தெலுங்கு
    காயம் 2 தெலுங்கு
    டேம் 999 ஆங்கிலம்[2]

    வெளி இணைப்புகள்

    நடிகை விமலா ராமன் – விக்கிப்பீடியா

    Actress Vimala Raman – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *